உலகம்

159 கிலோ எடை கொண்ட ராட்சச ‘வாழும் டைனோசர்’.. போராடி கரைக்கு கொண்டுவந்த காதலர்கள் - நடந்தது என்ன?

கனடாவை சேர்ந்தவர் பிரேடன் ரூஸ். இவர் பொழுதுபோக்கிற்காக ஆற்றில் படகில் சென்று மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் தனது காதலி சிட்னியுடன் சேர்ந்து ஆல்பர்டா பகுதியில் உள்ள ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார் பிரேடன்.

அப்போது, இவரது வலையில் 8 அடி நீளம், 159 கிலோ எடை கொண்ட ராட்சச மீன் ஒன்று சிக்கியுள்ளது. இதை படகிற்கு மேல் கொண்டு வர இருவரும் சேர்ந்து முயற்சி செய்தும் முடியவில்லை. பின்னர் வலையோடு சேர்த்து இழுத்துக்கொண்டு படகை கரைக்கு ஓட்டிவந்துள்ளனர்.

அப்போது, மீன் இவர்களை படகோடு சேர்த்து இழுத்துள்ளது. சுமார் அரை மணிநேர கடுமையான போராட்டத்திற்குப் பிறகு அந்த பிரம்மாண்ட மீனை கரைக்கு கொண்டுவந்துள்ளனர். இந்த காதலர்களிடம் சிக்கிய மீன் மிகவும் பழமைவாழ்ந்த "வாழும் டைனோசர்" என அழைக்கப்படும் ஸ்டர்ஜன் மீன் வகையாகும்.

245-208 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இந்த மீன்கள் எந்த பெரிய பரிணாம மாற்றமும் ஏற்படாமல் வாழ்ந்து வருவதாக மீன் வளர்ப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்த மீன்பிடி சாகசத்தை புகைப்படம் எடுத்து தனது சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார் பிரேடன் ரூஸ்..

Also Read: “பூமியை தாக்கும் சூரிய புயல் - இன்டர்நெட்.. GPS சேவைகள் பாதிக்க வாய்ப்பு” : NASA விஞ்ஞானி சொல்வது என்ன?