உலகம்

“பூமியை தாக்கும் சூரிய புயல் - இன்டர்நெட்.. GPS சேவைகள் பாதிக்க வாய்ப்பு” : NASA விஞ்ஞானி சொல்வது என்ன?

சூரியனில் காந்த புயல் ஏற்பட்டால் தொலை தொடர்பு பாதிப்படையும், பூமியை சுற்றி நூற்றுக்கணக்கான செயற்கை கோள்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாக விஞ்ஞானிக‌ள் தெரிவித்தனர்.

“பூமியை தாக்கும் சூரிய புயல் - இன்டர்நெட்.. GPS சேவைகள் பாதிக்க வாய்ப்பு” : NASA விஞ்ஞானி சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சூரியனில் ஏற்படும் வெடிப்புகளால் உருவாகும் சூரிய காந்த புயல்கள் பூமியை தாக்கும் என சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர். இதனால் விண்வெளியில் சேட்டிலைட், அலைபேசி அலைவரிசை பாதிக்கலாம் எனவும் எச்சரித்தனர்.

அதனைதொடர்ந்து கடந்த வாரத்த்தில் மார்ச் 30ம் தேதி, கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வு மையம், ஒரே நாளில் சூரிய காந்த புயல்கள் 8 முறை பூமியை தாக்கியதாக கொடைக்கானல் வான் இயற்பியல் விஞ்ஞானி குமரவேல் தெரிவித்தனர்.

மேலும், சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனில் கரும்புள்ளிகள் தோன்றும். கடந்த சில நாட்களாக இந்த கரும்புள்ளிகள் அதிகளவில் தோன்றி வருகிறது. இதனால் வரும் நாட்களில் இதன் வீரியம் அதிகரித்து சூரியகாந்த புயலாக மாறி பூமிக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சூரிய‌னில் க‌ரும்புள்ளிக‌ள் வ‌ழ‌க்க‌த்தை விட‌ பெரிய‌தாக‌ தென்ப‌டுவ‌தால் த‌ற்போது தொட‌ங்கியுள்ள‌ 25-வ‌து சுழ‌ற்சியில் புள்ளிக‌ள் தொட‌ர்ந்து விரிவ‌டைந்தால் சூரிய‌ காந்த‌ புய‌ல் ஏற்ப‌ட‌ வாய்ப்பு அதிக‌ரித்துள்ள‌தாக‌ விஞ்ஞானிக‌ள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதன் காரணமாக பூமியில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றும் சூரியனில் காந்த புயல் ஏற்பட்டால் தொலை தொடர்பு பாதிப்படையும், பூமியை சுற்றி நூற்றுக்கணக்கான செயற்கை கோள்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாக விஞ்ஞானிக‌ள் தெரிவித்தனர். மேலும் சூரியனை தொடர்ந்து கண்காணித்து அதன் தாக்கத்தை பதிவுசெய்து, ஆய்வுகள் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories