உலகம்
”PORN தளங்களை காண இனி க்ரெடிட் கார்டு ஆதாரங்கள் கட்டாயமாகிறது” - எங்கு தெரியுமா?
இணையம்தான் எல்லாம் எனும் சூழலில் வளரும் குழந்தைகள் சமூக வலைதளங்கள், இணையதளங்கள் மூலம் பருவ வயதுக்கு முன்பே ஆபாச காட்சிகளை பார்க்கும் வழக்கம் உலகெங்கும் தொடர்ந்து வருகிறது.
ஆகையால் இதனை தடுக்கும் வகையில் Online Security Bill என்ற மசோதாவை அமல்படுத்த பிரிட்டன் அரசு முன்னெடுத்துள்ளது.
அதன்படி Porn தளங்களை உபயோகிப்போர் 18 வயதை கடந்தவர்களா என்பதை உறுதி செய்ய அவர்களது கிரெட் கார்டு, பாஸ்போர்ட் போன்றவற்றை ஆதாரமாக அளிக்க வேண்டும் என்பதே அந்த சட்ட மசோதாவின் திட்டம்.
இது தொடர்பாக பேசியுள்ள பிரிட்டனின் இணையத்துறை அமைச்சர் கிறிஸ் ஃபிலிப், “சிறார்களுக்கான பாதுகாப்பான இடமாக இணையத்தை மாற்றுவதற்காக இவ்வாறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.
மேலும், பார்வையாளர்களின் வயது உள்ளிட்ட விவரங்களை பாதுகாத்து தனிநபரின் தனியுரிமையையும் காக்க வேண்டும் என PORN தளங்களுக்கு பிரிட்டன் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, இங்கிலாந்து நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒருவருக்கு மேற்பட்டோர் ஆபாச தளங்களை பார்க்கிறார்கள் என அந்நாட்டின் பெரு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!