இந்தியா

இளம்பெண்ணின் பிறப்புறுப்பில் Corona Sample எடுத்த ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை.. தீர்ப்பின் பின்னணி என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் இளம்பெண்ணுக்கு பிறப்புறுப்பில் கொரோனா மாதிரி எடுத்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளம்பெண்ணின் பிறப்புறுப்பில் Corona Sample எடுத்த ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை.. தீர்ப்பின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உள்ள ஷாப்பிங் மாலில் உள்ள பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என நிர்வாகம் கூறியுள்ளது.

இதனையடுத்து அங்கு பணியாற்றிய இளம்பெண் ஒருவர் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா பரிசோதனைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த லேப் டெக்னீஷியன் முதலில் அப்பெண்ணுக்கு மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் கொரோனா மாதிரி எடுத்துள்ளார்.

அதன்பின்னர் கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை முழுமையாக தெரிந்துகொள்ள பிறப்புறுப்பில் மாதிரி எடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். முதலில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் பின்னர் வேறு வடியில்லாமல் மாதிரி எடுக்க சம்மதித்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக தனது சகோதரரிடம் கூறியுள்ளார். சகோதரர் அதிர்ச்சியடைந்து தெரிந்த மருத்துவர் ஒருவரை அணுகி இதுதொடர்பாக விளக்கியபோது, மருத்துவர் மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் மட்டும்தான் எடுக்கவேண்டும் என்றும் வேறு எங்கேயும் எடுக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்தப் பெண், போலிஸில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது. மருத்துவமனை ஊழியரின் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories