உலகம்

லிஃப்ட் ஊழியர்களுக்கு 1,000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும் TESLA நிறுவனம் : என்ன நடந்தது?

அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து இனப்பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவரின் கழுத்தில் காலை வைத்து அழுத்தி டெர்ரக் சவுன் என்ற போலிஸார் கொலை செய்தார்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அமெரிக்கா வீதி எங்கும் போராட்டம் வெடித்தது. பிறகு போலிஸார் டெர்ரக் சவுன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்படி தொடர்ச்சியாக அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் மீது இன ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பணியிடத்தில் இனப்பாகுபாடு பார்க்கப்படுவதாக டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஓவன் டியாஸ் என்பவர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

இவர் 2015 முதல் 2016ம் ஆண்டு வரை டெஸ்லா நிறுவனத்தில் லிஃப்ட் இயக்குபவராக பணியாற்றி வந்தார். அப்போது சக ஊழியர்கள் இவர் மீது இனப்பாகுபாட்டை காட்டியுள்ளனர். இது குறித்து அவர் நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.

ஆனால் டெஸ்லா நிறுவனத்திடம் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தனக்கு நீதி கிடைக்க வேண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி லிலியம் ஓரிக், “முன்னாள் ஊழியர் ஓவன் டியாஸ் மீதான இனரீதியான துன்புறத்தலை தடுக்க டெஸ்லா நிறுவனம் தவறியுள்ளது. எனவே அவருக்கு 1,000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

Also Read: “அமெரிக்காவால் எதிர்க்க முடியாதவரை எதிர்த்து படமெடுத்த சாப்ளின்” : கடைசியில் அமெரிக்கா பணிந்தது ஏன்?