உலகம்
“நாட்டை விட்டு ஓடினால் அவ்ளோதான்” - AK-47ஐ தூக்கும் தாலிபான்கள்.. நாளுக்கு நாள் மோசமாகும் ஆப்கனின் நிலை!
அமெரிக்காவின் நேட்டோ படைகள் வெளியேறியதும் உடனடியாக ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றிய தாலிபான்கள் இனி எங்கள் தலைமையில்தான் அரசு அமையும் எனவும் பகிரங்கமாக அறிவித்தனர்.
இதனால் பீதியில் ஆழ்ந்த ஆப்கானியர்கள் மற்றும் பிறநாட்டு மக்களும் உடைமைகளை விட்டுவிட்டு பிழைத்தால் போதும் என கிடைக்கும் விமானத்தில் முண்டியடித்து சென்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தாலிபான்களோ அனைவருக்கும் பொது மன்னிப்பு கொடுக்கிறோம். நாட்டை விட்டு எவரும் செல்லவேண்டாம் எனக் கூறியிருக்கிறார்கள்.
மேலும் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைக்கு வருவோரிடம் எவரும் ஆப்கானிஸ்தானை விட்டுச் செல்லவேண்டாம் என அறிவுறுத்துமாறும் இஸ்லாமிய இமாம்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார்கள் தாலிபான்கள்.
இருப்பினும் முந்தைய ஆட்சியின் போது தாலிபான்கள் மேற்கொண்ட கொடூர நடவடிக்கைகள் மீண்டும் தொடர வாய்ப்பிருப்பதால் தப்பித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அந்நாட்டு மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படி இருக்கையில் முறையான விசா உள்ளிட்ட ஆவணங்களுடன் வேறு நாட்டுக்கு பயணிக்க காபூல் விமான நிலையத்துக்கு வரும் மக்களை தாலிபான்கள் அனுமதிப்பதில்லை. மீறி வெளியேறும் எண்ணத்தில் வருவோர் மீது ஏ.கே.47 துப்பாக்கியை நீட்டி மிரட்டல் விடுக்கிறார்கள்.
இது தொடர்பாக ரேடியோ நியூஸிலாந்து இணையதள செய்திக்கு பேட்டியளித்துள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள், இங்கு ஒவ்வொரு நாளும் முந்தைய நாளைவிட மோசமான நிலையே உள்ளது. உரிய ஆவணத்துடன் சென்றாலும் விண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அச்சுறுத்தி வருகிறார்கள் எனக் கூறியிருக்கிறார்கள்.
Also Read
-
"வெல்வோம் 200! படைப்போம் வரலாறு அதுவே என் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி" : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“வி.பி.சிங் போன்ற பிரதமரை கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திராவிட மாடல் 2.0 ஆட்சியை மலரச் செய்வோம் : பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி சூளுரை!
-
“விவசாயிகள் முதுகில் குத்திய பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும்” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சமூக விரோத சட்டங்கள் : தொழிலாளர் வர்க்கத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் ஒன்றிய அரசு - முரசொலி!