உலகம்

“நான் இங்கேயேதான் இருக்கேன்” : தாலிபான்களுக்கு போட்டியாக களமிறங்கும் ஆப்கன் துணை அதிபர்!

அமெரிக்கா தன் படைகளை திரும்ப பெற்றதை அடுத்து ஆப்கானிஸ்தானை 20 ஆண்டுகளுக்கு பிறகு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் தாலிபன்கள். கந்தஹாரை அடுத்து காபூலில் தாலிபன்கள் தரையிறங்கியதும் நாட்டையும் நாட்டு மக்களையும் நடுத்தெருவில் தவிக்க விட்டு தப்பியோடியிருக்கிறார் அதிபர் அஷ்ரப் கனி.

இதனால் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதும் என்றும் அனைவரும் பொது மன்னிப்பு வழங்குகிறோம் இங்கேயே இருங்கள் எனவும் தாலிபன்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் ஆப்கனில் புதிய அரசை கட்டமைப்பதற்காக பல கட்ட ஆலோசனைகளிலும் தாலிபன்கள் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இப்படி இருக்கையில் நான்தான் ஆப்கனிஸ்தானின் அடுத்த அதிபர் எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் துணை அதிபர் அமருல்லா சலேஷ். அவரது ட்விட்டர் பதிவில் ஆப்கானிஸ்தானின் அரசியல் சாசனத்தின் படி நாட்டின் அதிபர் இல்லாத நேரத்திலோ, தப்பியோடிவிட்டாலோ, பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ அதிபர் பதவியை துணை அதிபர்தான் ஏற்பார். நான் நாட்டிற்குள்ளேயேதான் இருக்கிறேன். ஆகவே முறையாக நான்தான் அடுத்த அதிபர். இதற்காக அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளேன்.

மேலும், தாலிபன்களின் இசைவுக்கெல்லாம் என்றுமே தலைவணங்கவும் போவதில்லை. என்னை நம்பியவர்களையும் காட்டியும் கொடுக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: 'துணிந்து நில்'... தாலிபான்களை எதிர்த்து முதல் போராட்டத்தை நடத்திய ஆப்கானிஸ்தான் பெண்கள்!