உலகம்

“ஸ்டேன் சுவாமியின் மரணம் இந்திய மனித உரிமை வரலாற்றில் ஒரு கறை” - மோடி அரசுக்கு ஐ.நா கண்டனம்!

பழங்குடியின மக்களின் உரிமைப் போராளி ஸ்டேன் சுவாமி மீது போலியான வழக்குகளைத் தொடர்ந்து அவரைத் தொடர்ந்து சிறையில் அடைத்து மோடி அரசு வருத்திய நிலையில் அவர் கடந்த வாரம் உயிரிழந்தார்.

ஸ்டேன் சுவாமியின் மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது மரணத்திற்கு மோடி அரசே காரணம் என எதிர்க்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் விமர்சித்தனர்.

இந்நிலையில் ஸ்டேன் சுவாமி மரணம் குறித்து ஐ.நா., நல்லிணக்க அதிகாரி மேரி லாலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதாரங்களின் அடிப்படை இல்லாமல் கைது செய்யப்படும் மனித உரிமைகள் ஆர்வலர்களை, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை ஸ்டேன் சாமியின் இறப்பு நமக்கு உணர்த்துகிறது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடிய ஸ்டேன் சுவாமியின் இறப்பு இந்திய மனித உரிமைகள் வரலாற்றில் ஏற்பட்ட கறை.

மனித உரிமைகள் ஆர்வலரான அவரை தீவிரவாதி போல் நடத்தியதை ஒரு போதும் மன்னிக்க முடியாது. உரிமைகள் மறுக்கப்பட்டு பலியான ஸ்டேன் சுவாமி போல் இனி யாரும் உயிரிழக்கக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு நீதி வேண்டும்” - குடியரசுத் தலைவருக்கு 10 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடிதம்!