உலகம்
வெள்ளை மாளிகைக்குள் நுழையும் நான் முதல் பெண்தான்.. ஆனால் கடைசி பெண்ணல்ல.. கமலா ஹாரிஸ் நெகிழ்ச்சி பேச்சு!
உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்கும் வகையில் அமைந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் 46வது அதிபராக வெற்றி பெற்றிருக்கிறார்.
அவரது வெற்றியின் மூலம் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் முதல் பெண் துணை அதிபராக வென்றுள்ளார். அவரது வெற்றி உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு பெரும் புத்துணர்ச்சியையும், நம்பிக்கையை ஊட்டும் வகையில் அமைந்திருக்கிறது.
ஜோ பைடனுக்கும், கமலா ஹாரிஸுக்கும் உலகின் பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க மக்களிடம் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் வெற்றி உரை ஆற்றினார்.
அதில், நம்பிக்கையுடன் அமெரிக்காவுக்கு வந்த எனது தாயை இந்த வெற்றி தருணத்தில் நினைவு கூறுகிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தை சாத்தியப்படுத்திய கருப்பின மக்கள், ஆசிரியர்கள், வெள்ளை இனத்தவர்கள், லத்தீனியர்கள் என அனைவரையும் நினைவுக் கூறுகிறேன்.
ஜோ பைடன் குணப்படுத்தும் நபராவார். மக்களின் தேவை குறித்த புரிதல் தோல்வியை சந்தித்தவருக்கு இருக்கும். அந்த புரிதம் நம் நோக்கத்தை மீட்டெடுக்க உதவும். அமெரிக்காவுக்கான நம்பிக்கையை, ஒற்றுமையை, கண்ணியத்தை தேர்வு செய்திருக்கிறீர்கள்.
மக்கள்தான் ஜனநாயகத்தின் முதுகெலும்பு. 100 ஆண்டுகளுக்கு முன்பு 19வது சட்டத்திருத்தத்திற்காக போராடிய பெண் இனம், 55 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குரிமைக்காக போராடியது. தற்போது 2020ல் புதிய தலைமுறை பெண்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த போராட்டங்களின் வெளிப்பாடே தற்போது நான் அடைந்திருக்கும் வெற்றி. வெள்ளை மாளிகைக்குள் நுழையும் முதல் பெண் துணை அதிபராக நான் இருக்கலாம். ஆனா கடைசி பெண்ணாக இருக்க மாட்டேன். பெண்களின் வெற்றிக்காக நிறைய சாத்தியக்கூறுகள் உருவாக இருக்கின்றன.
என கமலா ஹாரிஸ் தனது உரையில் கூறியுள்ளார்.
Also Read
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!
-
வேளாண் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது ? : செல்வப்பெருந்தகை கேள்வி!
-
அறிவாலயத்தில் நடந்த நெகிழ்ச்சி நிகழ்வு! - கழக உடன்பிறப்பின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய முதலமைச்சர்!
-
மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கிய ஒன்றிய அரசு : மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
-
NIA வழக்குகளில் தனி நீதிமன்றம் அமைத்து 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு !