உலகம்
கொரோனா பாதிப்பில் 2வது இடத்தை நெருங்கும் இந்தியா : தற்பெருமை பேசாமல் நடவடிக்கை எடுக்குமா மோடி அரசு?
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 27,062,744 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 883,740 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 6,431,152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 192,818 பேர் பலியாகினர்.
இந்நிலையில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 24 மணி நேரத்தில் 75,760 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,095 பேருக்கும், பிரேசிலில் 31,199 பேருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில், 86,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் உள்ளது. அதேப்போல் உலகளவில் கொரோனா பாதிப்பில் 3வது இடத்தில் இருக்கும் இந்தியா, தற்போது பிரேசிலை முந்திக்கொண்டு 2வது இடைத்தை பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,110,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 70,679 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவைத் தொடர்ந்து, ரஷ்யா - 1,020,310, பெரு - 683,702 , கொலம்பியா - 658,456, தென் ஆப்பிரிக்கா - 636,884, மெக்சிகோ - 629,409 , ஸ்பெயின் - 517,133, அர்ஜண்டினா - 471,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளை தவிர உலகின் மற்ற பகுதிகளில் கொரோனா வேகம் படிப்படியாக குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் இன்னும் அதிகரித்து கொண்டே செல்வதாகவும், இருப்பினும் உலகளவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் குறைந்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
Also Read
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!