உலகம்
இந்தியா, பிரேசில் நாடுகளில் கொரோனா வேகம் அதிகரிப்பு - உலகளவில் கொரோனா பாதிப்பின் நிலை என்ன? #CoronaUpdate
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 24,625,149 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 835,627 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 24 மணி நேரத்தில் 75,760 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 699 பேருக்கும், பிரேசிலில் 42 ஆயிரத்து 489 பேருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 6,046,634 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 184,796 பேர் பலியாகினர். அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் உள்ளது. பிரேசிலில் 37,64,493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 118,726 பேர் பலியாகினர்.
இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் தணியத் தொடங்கிய நிலையில், பிரேசில், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. அதேப்போல் 4வது இடத்தில் இருந்த இந்தியா 3வது இடத்திற்குச் சென்றுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,384,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 61,694 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவைத் தொடர்ந்து, ரஷ்யா - 9,75,576, தென் ஆப்பிரிக்கா - 6,18,286, பெரு - 6,13,378, கொலம்பியா - 5,82,022, மெக்சிகோ - 5,73,888, ஸ்பெயின் - 4,51,792, சிலி - 4,04,102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது முழுமையாக செய்துள்ளது ரஷ்யா. மேலும் இந்த சோதனை பாதுகாப்பானது என மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!