உலகம்
“8.29 லட்சத்தைக் கடந்த உயிர்பலி - 2.43 கோடி பேர் பாதிப்பு” : உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 24,332,275 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 829,666 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.
உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 6,000,365 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 183,653 பேர் பலியாகினர். அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் உள்ளது. இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் தணியத் தொடங்கிய நிலையில், பிரேசில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது.
அதேப்போல் 4வது இடத்தில் இருந்த இந்தியா 3வது இடத்திற்குச் சென்றுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,307,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 60,629 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது முழுமையாக செய்துள்ளது ரஷ்யா. மேலும் இந்த சோதனை பாதுகாப்பானது என மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!