உலகம்
“8.16 லட்சத்தைக் கடந்த உயிர்பலி - 2.38 கோடி பேர் பாதிப்பு” : உலக நாடுகளைச் சிதைக்கு கொரோனா தொற்று!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 23,809,241 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 817,005 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.
உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 5,915,630 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 181,114 பேர் பலியாகினர். அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் உள்ளது. இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் தணியத் தொடங்கிய நிலையில், பிரேசில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது.
அதேப்போல் 4வது இடத்தில் இருந்த இந்தியா 3வது இடத்திற்குச் சென்றுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,164,881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 58,546 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது முழுமையாக செய்துள்ளது ரஷ்யா. மேலும் இந்த சோதனை பாதுகாப்பானது என மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘சொல்லிக்கொள்ள சாதனை இல்லை.. வடிப்பதோ கிளிசரின் கண்ணீர்’ : முதலமைச்சர் விஜய் மீது முரசொலி தாக்கு!
-
“41 பேர் உயிரி*ந்தபோது ‘மனசாட்சி’ இல்லாமல் ஓடிச்சென்ற நாள் இன்று!” : மதுராந்தகத்தில் உதயநிதி பேச்சு!
-
அரசாணை வெளியிடுவது.. திரும்பப் பெறுவது.. repeat! : த.வெ.க அரசுக்கு எழும் கண்டனங்கள்!
-
16 ஆண்டுகளாக வழங்கிவந்த ‘முட்டைகள்’ தவெக ஆட்சியில் நிறுத்தம்! - முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
சட்டம், ஒழுங்கு தகவல்கள் RTI கீழ் விலக்கு.. கடும் எதிர்ப்பு கிளம்பியதும் U-Turn அடித்த தவெக அரசு!