உலகம்

H1B , க்ரீன் கார்டுகளுக்கு தடை நீட்டிப்பு: 5.25 லட்சம் வேலைவாய்ப்பு பறிப்பு - ட்ரம்ப் உத்தரவால் பரபரப்பு!

உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் வேலையின்றி வாழ்வாதாரம் இழந்து பெரும் துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், வெளி நாட்டவர்களுக்கான H1B விசா வழங்குவதை இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அதுமட்டுமல்லாமல் H2B, L மற்றும் J பிரிவு விசாக்களுக்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விசா ரத்து அறிவிப்பு முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கும், டூரிஸ்ட் விசாவில் இருப்போருக்கும் பொருந்தும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதேச்சமயத்தில் நிரந்தரமாக பிற நாட்டைச் சேர்ந்தவர்கள், அவர்களது குடும்பத்தினர் இந்த உத்தரவால் பாதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இருப்பினும் எச் 1 பி விசா ரத்து செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி.பணியாளர்கள் கடுமையான சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கெனவே விசா பெற்றவர்களாலும் அமெரிக்காவுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

விசா ரத்து மட்டுமல்லாது, புதிதாக பச்சை அட்டை வழங்கும் நடைமுறையும் அமெரிக்காவில் நிறுத்திவைக்கப்படுகிறது. இது தொடர்பாக பேசியுள்ள அதிபர் ட்ரம்ப், உள்நாட்டு மக்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்

நிலைக்குலைந்து போயுள்ள அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு பலனளிக்கும் வகையில் இந்த உத்தரவு இருக்கும் என மூத்த அதிகாரி ஒருவர் பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார்.

Also Read: கொரோனா தோல்வியை மறைக்க WHO-வின் உறவை முறித்துக் கொண்ட அமெரிக்கா: டிரம்ப் முடிவால் நடக்கும் ஆபத்து என்ன?

அதேச்சமயத்தில், கொரோனா பரவலை காரணமாக வைத்து குடிவரவு நடைமுறைகளை மாற்றியமைக்கவும், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை மனதில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது எனவும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம், வெளி நாட்டைச் சேர்ந்த 5.25 லட்சம் பேரின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தியா போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தாலேயே அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கு பணிக்காக செல்லும் வழக்கம் இருந்தது. தற்போது அதற்கு முட்டுக்கட்டு போடும் வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளது மிகுந்த கவலையளிக்கும் விதமாக உள்ளது.

Also Read: “மோடி அரசின் பொருளாதார கொள்கையால் இந்தியாவின் ஜிடிபி 4% ஆக குறையும்” - மூடிஸ் அதிர்ச்சி தகவல்!