உலகம்
“புதிய அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளோம்” : கொரோனா அதிதீவிரமாக பரவுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பெரும் விஸ்ரூபம் எடுத்து வருகிறது. சீன தலைநகர் பெய்ஜ்ங்க் மற்றும் ஆஸ்திரேலியாவில் கொரோனா 2வது அலை உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 87 லட்சத்துக்கு 58 ஆயிரத்தை கடந்துள்ளது. 4 லட்சத்து 62 ஆயிரம் பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகி இருக்கின்றனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் உலக அளவில் முதல் முறையாக இந்த பாதிப்பு எண்ணிக்கை கூடியிருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்கா, தெற்கு ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா தீவிரமாகியுள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது, “அமெரிக்கா, தெற்கு ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக பரவி வருகிறது.
இதனிடையே கொரோனா பாதிப்பைத் தடுக்கும் மருந்துகண்டுபிடிப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதனால் நாட்டு மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். அதுமட்டுமல்லது, உலக நாடுகள் பொருளாதாரத்தை மீட்க ஆர்வம் காட்டுகிறது. அதே நேரம் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருவதை கருத்தில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!
-
திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
-
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!
-
“நலம் காக்கும் ஸ்டாலின் “ திட்டம் : 800 முகாம்கள் - 12,34,908 பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டது என்ன?