உலகம்
குழந்தைகளுக்கு கேன்சர் : பேபி பவுடரின் விற்பனையை நிறுத்தும் ஜான்சன் அண்ட் ஜான்சன்!
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மருந்து மற்றும் குழந்தைகளுக்கான நுகர்வுப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது.
சமீபத்தில் கூட அமெரிக்காவைச் சேர்ந்த நிக்கோலஸ் முர்ரோ என்பவர் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பு பொருளால் தனக்கு மார்பகம் வளர்ந்துவிட்டதாக கூறி, அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதன் பேரில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் ரூ.56,000 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இதனையடுத்து ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்பட்டதாக அமெரிக்காவில் 4 பேர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய அஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதாக 16,000-க்கும் அதிகமான புகாா் மனுக்கள் அந்த நிறுவனத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கை, மத்திய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கிறது. வழக்கு விசாரணையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாசின் அம்சங்கள் இருப்பதால் அது புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் உள்ளது என்றும், வாடிக்கையாளர்களிடம் இது தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் செய்யவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இதற்கான வழக்கை விசாரித்த நியூ ஜெர்சி நீதிமன்றம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு சுமார் 5,365 கோடி ரூபாயை (750 மில்லியன் அமெரிக்க டாலர்) அபராதமாக விதித்தது.
அப்போது இது தொடர்பான குற்றச்சாட்டுகளை நியூ ஜெர்சி நீதிமன்றம் நிறுவனம் மறுத்தது. மேலும் தவறான விபரங்களின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகவும் அந்நிறுவனம் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது.
Also Read
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!
-
“சொத்துவரி உயர்வு.. சென்னை மக்கள் தலையில் பேரிடி” : முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்!