உலகம்
“அமெரிக்காவில் இருந்து உங்கள் மக்களை அழைத்துச் செல்லுங்கள்” - விசா தடையை விதித்து மிரட்டும் ட்ரம்ப்!
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தங்கள் நாட்டுமக்களை திரும்ப அழைக்காத நாடுகளுக்கு விசா தடை விதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையோ 18 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதில், அதிகபடியான வைரஸ் பாதிப்பை கொண்டுள்ள நாடாக உள்ளது உலகின் வல்லரசான அமெரிக்கா உள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கையிலும், பாதிப்பு எண்ணிக்கையிலும் தற்போது அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 31 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் பிற நாடுகளைச் சேர்ந்த மக்களை திரும்ப அழைக்காத நாடுகளுக்கு விசா தடையை டிசம்பர் 31ம் தேதி வரை விதித்து உத்தரவிட்டுள்ளார் அதிபர் ட்ரம்ப்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆணையில், அமெரிக்காவில் பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் விதிமீறல்களில் ஈட்டுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு விதிகளை மீறுவோரை தத்தம் நாட்டுக்கே திருப்பி அனுப்புவதில் அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை செயலாளர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். இந்த ஆணை 7 நாட்களுக்குள் அமல்படுத்தப்படும் என்றும், அதற்கான பட்டியல் பாதுகாப்புத்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!