உலகம்

அம்மா மீது இருந்த பாசத்தில் மகன் செய்த விபரீதம் : பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சீனா நாட்டின் சோங்கிங் (chongqing) நகரில் உள்ள தன் அம்மாவை இடித்த கார் மீது சிறுவன் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் சமூக ஊடங்களில் பரவியது. மேலும் சிறுவனுக்கு இருக்கும் அம்மாவின் பாசம் என அந்த வீடியோவை அனைவரின் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றது.

அதேப்போல், பிரேசில் நாட்டில் தனது அம்மா ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வேதனை அடைவதால் அவருக்கு ஓட்டுநர் உரிமம் பெற்று தர மகன் செய்த காரியம் விபரீதத்தில் முடிந்துள்ளது. பிரேசில் நாட்டில் நோவாமுட்டும் பரானா நகரத்தைச் சேர்ந்தவர் டோனா மரியா. இவருக்கு 43 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.

டோனா மரியா ஓட்டுநர் உரிமம் பெற விரும்பி நீண்ட நாளாக போராடி வருகிறார். ஒவ்வொரு முறையும் அதற்கான சோதனையில் தோல்வியை தழுவினார். இதுபோல தொடர்ந்து 3 முறை தோல்வி அடைந்ததால் மிகுந்த மனவருத்ததில் டோனா மரியா இருந்துள்ளார்.

இதனைக்கண்டு வருத்தம் அடைந்த அவரது மகன் ஹெய்ட்டர், அம்மாவுக்கு தானே ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தருவது என முடிவு செய்தார். அம்மாவைப் போல வேடம் அணிந்து அவருக்கு பதிலாக தான் சோதனைக்கு சென்றார். சோதனைக்குச் செல்லும் முன்பு அவரது அம்மா அணியும் உடை, ஆபரணங்கள் கைப்பை என எடுத்துக் கொண்டு முழு செட் அப்போடு சென்றுள்ளார்.

ஆனால், அங்கிருந்த அதிகாரி தன்னிடம் அளிக்கப்பட்டுள்ள அடையாள அட்டையில் உள்ள பெண்ணின் புகைப்படத்திற்கும், சோதனைக்கு வந்திருப்பவரின் தோற்றத்துக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாக உணர்ந்து, காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

Also Read: அம்மா பாசம்! தாயை இடித்த கார் ஓட்டுநருடன் சண்டைக்கு சென்ற கோபக்கார சிறுவன் - வைரல் வீடியோ!

அதிகாரியின் புகாரின் அடிப்படையில், அந்த நபரைப் போலிஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், உண்மையை ஹெய்ட்டர் ஒப்புக்கொண்டார். பின்னர் அவரது தாயை வரவழைத்து விசாரத்ததில் அவருக்கு தெரியாமல், இவர் இதுபோல செய்ததும் அம்பலமானது.

இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக போலிஸார் ஆள் மாறாட்டம் செய்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். நீதிமன்றத்தில், அவர் ஜாமீன் பெற்றார். அம்மா மீது இருந்த பாசத்தில் இதுபோல செய்வது தவறானது என போலிஸார் அறிவுறை கூறி ஹெய்டரை அனுப்பி வைத்துள்ளனர்.