உலகம்
காஷ்மீர் விவகாரம் : ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட சீனா வலியுறுத்தல்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு சட்டப்பிரிவுகளை ரத்து செய்தும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
மோடி அரசின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்குப் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
காஷ்மீர் குறித்து விவாதிக்கப் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் கூட்டுமாறு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கடிதம் எழுதினார். இந்நிலையில், சீனாவும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த ஐக்கிய நாடுகள் சபையைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஐ.நா அதிகாரி ஒருவர், ''காஷ்மீர் குறித்து விவாதிக்குமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதிய நிலையில், சீனாவும் இது தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்த ஐக்கிய நாடுகள் சபையை கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் கோரிக்கை சமீபத்தில்தான் விடுக்கப்பட்டது. இந்த ஆலோசனை குறித்து எந்தத் தேதியும் இதுவரை ஒதுக்கப்படவில்லை'' என தெரிவித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!