உலகம்
இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் : லடாக்கை யூனியன் பிரதேசமாக்கியதற்கு சீனா எதிர்ப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 1949ல் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 1954ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவரால் செயல்படுத்தப்பட்ட 35ஏ என்ற சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அறிவித்தார்.
மேலும், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக்கும் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதா மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்குப் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் லடாக்கை யூனியன் பிரதேசமாக்கியதற்குச் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''இந்திய-சீன எல்லையில் மேற்குப் பிரிவில் இருக்கும் பகுதியை இந்தியா சேர்த்துக் கொள்வதைச் சீனா எப்போதும் எதிர்த்து வந்துள்ளது. இந்த நிலைப்பாட்டில் சீனா எப்போதும் தெளிவாக உள்ளது, இதில் மாற்றமில்லை.
சீனாவின் பிராந்திய இறையாண்மைக்கு எதிராக இந்தியா சட்டங்களைத் திருத்தி மாற்றியுள்ளதை ஏற்க முடியாது. இந்தச் சட்டங்களினால் எந்த வித தாக்கமும் ஏற்படுத்த முடியாது. எல்லை பிரச்சினையில் இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்'' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!