உலகம்
ஜப்பானில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்!
ஜப்பானின் வடக்குப் பகுதியில் சற்று முன்பு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
ஜப்பானின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் யமகட்டா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடற்பகுதியில் 7 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகவா பகுதியில் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மடிந்து, அந்த நாடே கோரமுகமானது அனைவருக்கும் நினைவிருக்கும். இந்நிலையில் தற்போது அங்கு மீண்டும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருப்பது மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.
நிலநடுக்கம் தொடரும் ஆபத்து இருப்பதால் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டு வருகிறது. பேரிடர் மீட்புக்குத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
Also Read
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!