உலகம்
ஓடும் விமானத்தில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த இந்தியருக்கு ஓராண்டு சிறை!
மும்பையிலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு விமானத்தில் சென்றுள்ளார் மும்பையைச் சேர்ந்த ஹர்மன் சிங் (36).
விமானத்தில் அனைவரும் தூங்கும் சமயத்தில், ஹர்மன் சிங், தனது, இருக்கைக்கு பக்கத்தில் இருந்த இளம்பெண்ணுக்கு (20) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனைக் கண்டு அச்சமடைந்த அந்த பெண் நகர முற்பட்டிருக்கிறார். ஆனால், ஹர்மன் சிங் விடாப்பிடியாக அப்பெண்ணை பிடித்துள்ளார். பின்னர் அந்த நபரிடம் இருந்து தப்பித்து விமானத்தில் உள்ள பணிப்பெண்ணிடம் புகார் அளித்துள்ளார்.
பிறகு, மான்செஸ்டர் விமான நிலைய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விமானம் தரையிறங்கியதும் ஹர்மன் சிங்கை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, தவறை ஒப்புக்கொண்ட ஹர்மன் சிங்குக்கு மான்செஸ்டர் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை அளித்தது. இதன் பிறகு ஹர்மன் சிங் சிறையில் அடைக்கப்பட்டார்.
Also Read
-
“Computer Expert பழனிசாமியின் கனவு பலிக்காது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!
-
#VBGRAMG - மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் : எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
நாடு முழுவதும் எத்தனை தபால் அலுவலகங்கள் மூடப்பட்டன? : நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு MP கேள்வி!
-
அமெரிக்க வரிவிதிப்பு : விரைவில் தீர்வு காண வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
காந்தியின் ராமராஜ்யமும், பா.ஜ.கவின் வதை ராஜ்யமும் : தெள்ளத் தெளிவாக விளக்கிய முரசொலி!