Viral

‘AI’ உண்டாக்கும் ஆபத்து.. மனித மூளைக்கு ‘செக்’ வைக்கும் செயற்கை நுண்னறிவு - பகீர் பின்னணி என்ன?

’AI’ நல்லதா..? கெட்டதா..?

நமக்கு ஆச்சரியங்களை அள்ளித்தரும் ’AI’ ஆபத்தையும் ஏற்படுத்துமா..?

மனிதர்களின் அன்றாட வேலையில் உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்னறிவு என்னும் AI (Artificial intelligence) மனிதர்களுக்கு நேர்மறையாக இருக்கும் வரை எந்த பாதிப்புகளும் இல்லை அதுவே எதிர்மறையாக உருவானால்?

மனிதனின் பரப்பரப்பான வாழ்வில் தனக்கான வசதிகள் நிறைந்த வாழ்விற்காக, உதவ பலவிதமான தொழில்நுட்பங்களை உருவாக்கி இருக்கின்றனர். அதில் மிக முக்கியமானதும் தவிர்க்க முடியாததுமாக இருக்கும் தொழில்நுட்பம் தான் AI. மனிதனின் அனைத்து விருப்பங்களுக்கேற்ப செயல்படக் கூடிய ஒரு அற்புதத் தொழில்நுட்பமாக உலகம் முழுவதும் பரந்து விரிந்து நிற்கிறது AI.

இத்தனை பேரை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இந்த AI திடீரென முளைத்த ஒன்றல்ல. கடந்த 1940 ஆம் ஆண்டு முதன் முதலில் Programmable Computer எனப்படும் நிரல்படுத்தக்கூடிய கணினியின் துவக்கமே AI-களின் தொடக்கம். அதற்குப் பின் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப பல மாற்றங்களை உள்ளடக்கி பெரிய வளர்ச்சியினை அடைந்துள்ளது. இதில் Reactive Machines எனப்படும் தானியங்கி முறையில் செயல்படக்கூடிய AIக்கள் இன்று பிரபலமாக திகழ்கிறது.

"தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்" என்பது போல மனிதனின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒன்றாக இந்த AI-கள் மாறிவிட்டன. நாம் செல்போனில் வைக்கும் அலாரம், கண் இமைக்கும் நேரத்தில் நடக்கும் G-pay பரிவர்த்தனைகள், Sensor மூலம் பயணக் கட்டணம் எடுக்கும் மெட்ரோ நிலையங்கள், கைரேகை மூலம் தரவுகளை பாதுகாக்கும் சாதனங்கள் முதலிய அனைத்துமே AI-களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவைகள் தான்.

இது மட்டுமல்லாது, இப்போது நீங்கள் நினைத்தால் ஒரு AI-ஐ திருமணமும் செய்துக் கொள்ளலாம். அமெரிக்காவைச் சேர்ந்த 63 வயது விமானப்படை வீரர் பீட்டர் தனது AI Chatbot ஆண்ட்ரியாவை சட்டப்படி திருமணம் செய்து கொண்டு எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

AI-களின் வருகைக்குப் பின் எந்த வேலையும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டியதில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம். காரணம் நாம் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை AI-கள் நொடிப் பொழுதில் செய்யது முடித்து விடும். உதாரணமாக குழந்தைகள் எழுதும் வீட்டுப் பாடத்தினை சொல்லலாம். முன் நாம் சிறு பிள்ளைகளாய் இருக்கும் போது ஒரு Homework செய்ய ஓராயிரம் நூல்களைப் புரட்டுவோம் அல்லவா.

ஆனால் இப்போது இருக்கும் பிள்ளைகள் சிறிதும் தயங்காமல் AI கொடுக்கும் விடைகளை அப்படியே Copy Paste செய்கின்றனர். இதனால் அவர்களின் சிந்திக்கும் திறன் குறைந்து விடுவதோடு அங்கு உழைப்பிற்கு வேலை இல்லாமல் போகிறது. இது மட்டுமில்லை தற்போது சில உலக நாடுகள் மருத்துவம், இராணுவம், தொழிற்சாலைகள் போன்ற முக்கிய துறைகளில் மனிதனுக்கு மாற்றாக AIகளை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படி மனிதனால் இயன்றவற்றையும் இயலாதவற்றையும் செய்வதில் இந்த AI-கள் சிறந்து விளங்குகின்றனர், மனிதனுக்காக உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் மனிதனுக்கே ஆபத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் இயல்பாகவே அனைவருக்கும் எழுந்துள்ளது. AI-களின் உதவியோடு தான் தொழில்நுட்பத்தில் இன்று நாம் உயர்ந்து நிற்கிறோம்.

அதற்காக எல்லா வேலைகளையும் AIஐ கொண்டு தான் செய்ய முடியும் என்று சொல்லிவிட முடியாது. சில வேலைகள் மனிதன் செய்தால் மட்டும் தான் Perfection இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். எல்லாவற்றையும் உருவாக்கும் மனித மூளைகளுக்கு செயற்கை நுண்னறிவால் எல்லாம் எந்த ஆபத்தும் வருவதற்கு வாய்ப்பில்லை என்றே பல ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

- ம.கீர்த்திகா.

Also Read: "செயற்கை நுண்ணறிவு விரைவில் மனிதனை விட புத்திசாலிகளாக மாறும்" -AI தொழில்நுட்பத்தின் தந்தை அச்சம் !