Viral
”எங்க அப்பாவை புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்”.. காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வந்த 9 வயது சிறுவன்!
ஆந்திரா மாநிலம் இஸ்லாம்பேட்டை காவல்நிலையத்தில் 9 வயது சிறுவர் ரஹீம் புகார் ஒன்று கொடுக்க வந்ததாகக் கூறியுள்ளார். அப்போது காவல்துறை ஆய்வாளர் சிவய்யா சிறுவனை அழைத்து காவல்நிலையத்திற்கு வந்த காரணம் குறித்து விசாரித்துள்ளார்.
அப்போது சிறுவன், தனது தந்தை தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து அம்மாவை அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் அவர் மீது போலிஸில் புகார் கொடுக்க வந்தேன். இவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் சிறுவனின் பெற்றோர் சுபானி மற்றும் சுப்பம்பியை அழைத்துக் கண்டித்துள்ளனர். மீண்டும் இதேபோன்று நடந்து கொண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் சுபானியை எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்.
பெரியவர்களே காவல் நிலையத்திற்கு வருவதற்கு அச்சப்படும் நிலையில் 9 வயது சிறுவன் துணிச்சலுடன் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வந்ததைப் பார்த்து போலிஸார் பாராட்டியுள்ளனர். தற்போது சிறுவன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த பலரும் அம்மாவின்மீதான காதல் இது என சிறுவனைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!