இந்தியா

நடுவானில் பயணியை கொத்திய தேள்.. அலறிய சக பயணிகள்.. ஏர் இந்தியா விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண்ணை தேள் ஒன்று கொத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் பயணியை கொத்திய தேள்.. அலறிய சக பயணிகள்.. ஏர் இந்தியா விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சில நாட்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோன்டைன் நகரில் இருந்து பிரிட்டோரியா நோக்கி பீச்கிராப்ட் பேரோன் 58 என்ற சிறிய ரக விமானம் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் விமானியின் முதுகில் பாம்பு ஊர்ந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்படி விமானி பயப்படாமல் சாதுரியமாக செயல்பட்டு விமான பயணிகளுக்கு தகவல் தந்து விமானத்தை பாதுகாப்பாக அவசர தரையிறக்கம் செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விமானத்தில் தேள் இருந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் பயணியை கொத்திய தேள்.. அலறிய சக பயணிகள்.. ஏர் இந்தியா விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

நாக்பூரிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமாக விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்து கொண்டிருந்த செளரப் சின்ஹா என்ற பெண் பயணியை திடீரென அங்கு மறைந்திருந்த தேள் ஒன்று கொட்டியுள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து விமான பணி பெண்களுக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பின் அந்த பெண்ணுக்கு முதலுதவி செய்யப்பட்ட நிலையில், மும்பை விமான நிலையத்துக்கும் இது குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

நடுவானில் பயணியை கொத்திய தேள்.. அலறிய சக பயணிகள்.. ஏர் இந்தியா விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

அதன்படி மும்பை விமான நிலையத்தில் மருத்துவர்கள் தயாராக இருந்துள்ளனர். பின்னர் விமானம் மும்பையில் தரையிறங்கியதும் அந்த பயணிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பயணி தற்போது நலமாக இருப்பதாக விமான நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. அதோடு விமானத்தின் உள்ளே தேள் எவ்வாறு வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அது குறித்த அறிக்கை வெளியாகும் என்றும் ஏர் இந்தியா நிருவாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories