Viral

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வீடியோ வெளியிட்ட கோபி மற்றும் சுதாகர்.. Parithabangal சேனலுக்கு தடையா?

தற்போதுள்ள இணைய உலகில் அனைவரும் மொபைல் போன்கள் இல்லாமல் இருக்க முடியாது. அதிலும் மக்களுக்குப் பொழுதுபோக்கு அம்சமாக அமையக் கூடியதுதான் முகநூல், Youtube உள்ளிட்ட ஆப்கள். அதிலும் Youtube பக்கம் மக்கள் தங்கள் பொழுதை நன்றாகக் கழிக்கின்றனர்.

அப்படி Youtube-ல் மக்களுக்குப் பொழுதுபோக்காக அதிகம் பேர், சேனல் ஒன்றை உருவாக்கி காமெடி, சீரியல், என்று பலவற்றை பதிவேற்றுகின்றனர். Youtube-ல் தோன்றுபவர்கள் மிகவும் பிரபலங்களாக இருக்கின்றனர். அதில் இருவர் தான் கோபி மற்றும் சுதாகர்.

ஆரம்பத்தில் Temple Monkeys என்ற சேனல் மூலமாக இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த இவர், ஒவ்வொரு வீடியோவுக்கு பல ஆயிரம் லைக்குகள் வாங்கிக் கொண்டிருந்தனர். நாளடைவில் இவர்களுக்கு என தனி ரசிகர்கள் வர தொடங்கவே, 'மெட்ராஸ் சென்ட்ரல்', 'பரிதாபங்கள்' என்று புதிய Youtube சேனல்களை உருவாக்கினர்.

அதன்பிறகு இவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் குவிய தொடங்கினர். அதோடு இவர்கள் போடும் ஒரு வீடியோ சில மணி நேரங்களில் லட்சக்கணக்கில் வியூஸ் பெற தொடங்கியது. ஒரு ஒரு கன்டென்டையும் எடுத்து ஒவ்வொரு வீடியோ செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் இவர்கள் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்று பெரிய அளவில் ட்ரெண்டானது. அந்த வீடியோவில் வடமாநில தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்திற்கு வேலை பார்ப்பதை நகைச்சுவையாகச் சித்தரித்து வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து வீடியோ வெளியிட்டிருந்த கோபி மற்றும் சுகாதார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் கோபி சுதாகர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Also Read: “எனக்கும் அவனுக்கும்தான் போட்டியே” -களத்தில் இறங்கிய கோபி-சுதாகர்: பரிதாபங்கள் தயாரிப்பில் உருவாகும் படம்