Viral

“100 கல்யாணமாவது பண்ணுவேன்..” - ஏற்கனவே 26 மனைவி வைத்திருக்கும் 60 வயது தாத்தாவின் வித்தியாசமான லட்சியம்!

பாகிஸ்தானைச் சேர்ந்த சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் தனது விருப்பத்தை பேட்டி ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இந்த முதியவருக்கு ஏற்கனவே 26 மாணவிகள் உள்ளனர். இவருக்கு ஆசையே அதிக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்வதே இவருக்கு வாடிக்கையாக உள்ளது. 26 பேரை திருமணம் செய்த இவர், 22 பேரை விவாகரத்து செய்துள்ளார். இவருக்கு 22 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகள் அனைவரும் அவரவர் தாயிடமே உள்ளனர். இந்த முதியவருக்கு வயது முதிர்ந்தாலும் கூட திருமணம் செய்துகொள்வதில் உள்ள ஆசைகள் விடவே இல்லை.

இவர் பேசிய வீடியோவை ஜியோத் ஜீத் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் பேசிய அந்த முதியவர், "நான் இறப்பதற்குள் 100 பேரை திருமணம் செய்யவேண்டும்; அவர்களை விவாகரத்தும் செய்ய வேண்டும். இதுவே எனது பொழுதுபோக்கு" என்கிறார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், தான் இறந்தாலும் கூட தனது மனைவி, மக்களுக்கு வீடுகள், சொத்துக்கள் உள்ளிட்டவையை வழங்கிவிட்டுதான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதோடு, அவரது 22 மனைவிகளுக்கும் விவாகரத்து கொடுப்பதற்கு முன்பே, அவர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் தேவையான சொத்துக்களை பிரித்து கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதுதான் தனது ஹாபி என்கிறார் அந்த முதியவர். இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் பாகிஸ்தானில் 50 வயதுமிக்க ஒருவர் பேட்டி அளித்தார். அதாவது 50 வயதுடைய சர்தார் ஜன் முகமது கான் கில்ஜி என்ற பெயர் கொண்ட அவர், அந்த பகுதியில் மருத்துவம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 மனைவிகள் இருக்கும் நிலையில், 4-வதாக திருமணம் செய்ய பெண் தேடினார்.

காரணம் அவருக்கு 60 குழந்தைகள் இருக்கும் நிலையில், தான் 100 குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும், தான் இறப்பதற்கு முன்பு இதனை சாதித்து காட்ட வேண்டும் என்றும் இவர் விளக்கமளித்தார். அதோடு தனது 3 மனைவிகள் மேலும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பதாக கூறிய அவர், இருப்பினும் 4-வதாக திருமணம் செய்தால் விரைவில் தனது ஆசை நிறைவேறும் என்றார்.

இவரது இந்த பேச்சு உலக அளவில் பேசு பொருளாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், தற்போது மீண்டும் இதே போல் 60 வயது முதியவர் ஒருவர் பேசியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “இதுதான் நடந்தது.. என் அப்பா இறப்பு பத்தி பொய் செய்திய பரப்பாதீங்க..” - நடிகர் மயில்சாமியின் மகன் பேட்டி!