Viral
“ஷப்பா.. கண்ணெல்லாம் கட்டுதே” : 60 வருஷங்களாக தூங்காத அதிசய மனிதர்.. யார் இந்த ‘Thai Ngoc’ ?
தூக்கம் ஒருமனிதனுக்கு உயிர்வாழ தேவையான முக்கியமான விஷயம். குறைந்தது ஒருநாளைக்கு 5 - 6 மணி நேரம் கட்டாயம் தூங்கி ஆக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருவார்கள். சாப்பிடமால் கூட நீண்ட நாட்கள் உயிர் பிழைத்திருக்க முடியும்.
ஆனால், தொடர்ந்து 11 நாட்கள் தூங்காமல் இருந்தால் மனிதன் இறக்க நேரிடும் என்றும் மருத்துவ குறிப்புகள் சொல்கிறது. அப்படி இருக்கையில், தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பது நம்மில் பலருக்கும் தெரியும்.
குறிப்பாக சரியாக தூங்கினால் மட்டும் தான் அன்றைய நாளை அலுப்பு இல்லாமல் தங்களின் வேலையைத் தொடங்க முடியும். ஒருவேளை குறைவான நேரம் தொடர்ச்சியாக தூங்கினால் உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆனால், வியட்நாமைச் சேர்ந்த 80 வயது நபர் ஒருவர், கடந்த 60 ஆண்டுகளாக தூங்காமல் இருந்து வருகிறார். சமீபத்தில் Drew Binsky என்ற யூடியூப் சேனல் தொடர்ந்து 10 நாட்கள் அந்த நபருடன் இருந்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். தற்போதுஅந்த வீடியோ வைரலாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமின் க்யூ சன் மாவட்டத்தில் உள்ள க்யூ டிரங்க் நகரைச் சேர்ந்தவர் தாய் நகோக். இவரது சொந்த ஊரில் தாய் நகோக் என்றால் எவருக்கும் தெரியாது. ஆனால் தூங்காத மனிதர் என்றால் அனைவருக்கும் தெரியும் மனிதராக ஹாய் கோக் இருக்கிறார்.
கடந்த 1973ம் ஆண்டில் தாய் நகோக்கு திடீரென மர்மக் காய்ச்சல் தாக்கியுள்ளது. அப்போது சிகிச்சையில் இருந்த அவருக்கு தூக்கம் இல்லாமல் போனதாக கூறுகிறார். அதன்பின்னர் எவ்வளவுதான் புரண்டு, சுருண்டு படுத்தாலும், தூக்கம் மட்டும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவே இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் மது குடித்தால் தூக்கம் வந்துவிடும் என நினைத்து மது அருந்தியுள்ளார். ஆனாலும் அவர் தூங்கவில்லை. பின்னர் மருத்துவரைச் சென்று பார்த்திருக்கிறார். மருத்துவர் கொடுத்த மாத்திரையும் அவரது தூக்கத்தை வரவழக்கவில்லை. தூக்கம் இல்லாததால் பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா என மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது சிறுநீரகத்தில் மிகச்சிறிய பாதிப்பு தவிர வேறு எந்தக் குறையும் தாய் நகோக் உடலில் இல்லை. இது மருத்துவர்களுக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தாய் நகோக், “20 வயதில் இருந்து தூக்கம் வரவில்லை. சில நேரங்களில் தூங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தூங்காமல் இருப்பது வெறுமையாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
-
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!
-
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
-
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
-
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!