Viral
Online Order பரிதாபங்கள் : Bread Packet-க்குள் உயிரோடு இருந்த எலி.. உறைந்துபோன வாடிக்கையாளர் - VIDEO !
உலகம் முழுவதும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்தியாவில் கூட zomato, swiggy, uber நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களில் பணி பாதுகாப்பற்ற நிலையில் பட்டதாரி இளைஞர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் வேலைபார்த்து வருகின்றனர்.
மேலும், வாடிக்கயைளர்களுக்கும் உணவு டெலிவரி செய்பவர்களுக்கும் இடையே அவ்வப்போது ஏதாவது ஒரு பிரச்சனை எழுந்து கொண்டே இருக்கிறது. அதுவும் குறிப்பாக உணவு நேரத்திற்குக் வருவதில்லை என்ற குற்றச்சாட்டை வாடிக்கையாளர்கள் அதிகமாக முன்வைத்து வருகின்றனர். அதோடு அவர்கள் டெலிவரி செய்யும் உணவு பொருட்களை சில கெட்டுபோனவையாகவும், மாற்றி டெலிவரி செய்தும் வருவது அடிக்கடி நடக்கும்.
அதோடு இதுபோன்ற உணவு பொருட்களில் சில நேரங்கள் பல்லி, கரப்பான் பூச்சி போன்றவையும் இருக்கும். தற்போது அதுபோன்ற ஒரு சம்பவம்தான் வெளிநாட்டில் நடந்துள்ளது. நித்தின் அரோரா என்பவர் 'பிளின்கிட்' (Blinkit) என்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் பிரெட் பாக்கெட் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
கடந்த 1-ம் தேதி ஆர்டர் செய்த இவருக்கு வெறும் 10 நிமிடங்களிலே பிரெட் பாக்கெட் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபரோ இந்த பாக்கெட்டை பிரிக்க முயன்றுள்ளார். அப்போது அதில் எலி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் அந்த எலி உயிரோடு அந்த பாக்கெட்டுக்குள் அங்கும் இங்குமாக ஓடியுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த நபர், இதனை முழுவதுமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு புகார் தெரிவித்துள்ளார். அதோடு இதனை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சம்மந்தப்பட்ட நிறுவனத்தை டேகும் செய்தார்.
இந்த வீடியோ பெரும் வைரலானதை அடுத்து, சம்பந்தபட்ட டெலிவரி நிறுவனம் தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாகவும், இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டங்கள் வலுத்து வருகிறது. ஒரு பிரெட் பாக்கெட்டுக்குள் எலி ஒரு உயிரோடு அங்கும் இங்கும் சுற்றி திரிந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!
-
“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !