Viral

“கடலில் மிதக்கும் ஹோட்டல்கள்.. ஏர்போர்ட்..” : உலக அளவில் கடலுக்குள் உள்ள கட்டுமானங்கள் பற்றி தெரியுமா ?

தன் வாழ்நாளெல்லாம் தமிழுக்கும் தமிழர்களின் மேம்பாட்டுக்கும் எழுதிக்குவித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு கடலுக்குள் பேனா சின்னமா? என சில கருத்துக்கூடர்கள் கேட்கிறார்கள். அதற்கு பதிலளிக்கும் வகையில் கடலுக்குள் எந்தெந்த நாடுகளில் கட்டுமானங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை இந்த தொகுப்பில் கூறப்பட்டுள்ளது வருமாறு:-

கடலுக்குள் எங்கேயுமே கட்டுமானங்கள் இல்லையா? உலக அளவிலும், இந்தியா அளவிலும் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள பல கட்டுமானங்கள் பற்றி பார்க்கலாம்..

துபாயில் கடலுக்குள் பாம் ஜூமேரா நகரம்!

உலகின் மிக முக்கியமான நகரமாக இருப்பது துபாய். இங்கே செயற்கையாக கடலுக்குள் அமைக்கப்பட்ட நகரமாக, தீவாக இருப்பதுதான் பாம் ஜூமேரா. உலகின் பணக்காரர்கள் பலருக்கும் இங்கே வீடுகள் இருக்கிறது. கடலில் பத்து மீட்டர் ஆழத்திற்கு மணல் கொட்டப்பட்டு அந்தப் பகுதிகளை மேடாக்கி தீவுக் கூட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்டு இந்தத் தீவு கட்டப்பட்டுள்ளது. மேலே இருந்து பார்த்தோமேயானால், ஒரு பெரிய பேரீட்ச மரம் இருப்பதைப் போன்ற வடிவத்தில் இந்தத் தீவு இருக்கும். அதனால் தான் இதற்கு பாம் அப்படின்னு பெயர் வைத்து இருக்கிறார்கள்.

கரையில் இருந்து கடலுக்கு ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதை அமைத்து கட்டடங்கள் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக நான்காயிரம் வீடுகளும், ஒரு மிகப்பெரிய ரிசார்ட்டும் அமைக்கப்பட்டுள்ளது. 2001-ல் வேலையைத் தொடங்கி 2009 இல் முடித்து இருக்கிறார்கள். அப்போதே மக்களும் குடியேறி வசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

துபாயின் முக்கியமான இடமாக இது மாறிப்போனதுடன், சுற்றுலா பயணிகளை ஈர்க்கக் கூடிய இடமாகவும் உருவாகி இருக்கிறது இந்த பாம் ஜுமேரா.

ஜப்பானில் கடலில் அமைக்கப்பட்ட விமான நிலையம்!

விமான நிலையத்தை கடலில் அமைக்க முடியுமா? அதுவும் சர்வதேச விமான நிலையத்தை அமைக்க முடியுமா? என்ற கேள்விக்கு. முடியும் என நிருபித்து காட்டியது ஜப்பான். உலகிலேயே கடலில் அமைக்கப்பட்ட முதல் விமான நிலையம் இதுதான் என பெருமை பெற்றது கன்சாய் விமான நிலையம்.

ஜப்பானின் வர்த்தகத் தொடர்பை அதிகரிக்கும் நோக்கில் கன்சாயில் ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் கடலில் அமைக்கலாம் என யோசனை சொல்லியிருக்கிறார்கள் பொறியாளர்கள். ஆனால் நில நடுக்கத்தைக் கண்டு யோசித்து இருக்கிறது அரசு. இருந்தாலும் வடிவமைப்பு திட்டங்களைப் பொறுமையாக எடுத்துக் கூற ஜப்பான் அரசு அனுமதி கொடுத்திருக்கிறது.

1987ஆம் ஆண்டு விமான நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின. குறிப்பிட்ட பகுதியில் கடல் நீரை வெளியேற்றி கல் மற்றும் மணலை நிரப்பக் கூடிய கட்டுமானப் பணிகள் நடந்திருக்கு. இதற்காக மூன்று மலைக் குன்றுகளைத் தகர்த்து கல்லை எடுத்து வர ஜப்பான் அரசு அனுமதியும் கொடுத்து இருக்கிறது. சுமார் 4.5 கிலோ மீட்டர் நீளமும், 2.5 கிலோ மீட்டர் அகலமும் கொண்டதாக உருவானது இந்த விமான நிலையம். பணிகள் முடிந்து 1994 இல் விமான நிலையம் திறக்கப்பட்டது.

சுவீடனில் கடலுக்குள் செயற்கைத் தீவு - சுரங்கம்!

கடலுக்கு நடுவே ஒரு பாலத்தையும் சுரங்கத்தையும் அமைத்து இரண்டு நாடுகளையும் இணைக்க முடியுமா? ஆனால் அதனை சாத்தியமாக்கி இருக்கிறது, சுவீடனும் டென்மார்க்கும். ஆமாம், சுவீடனும் டென்மார்க்கும் பெபரகாம் பகுதியில் தங்களது எல்லைகளைப் பிரித்துக் கொள்கிறார்கள்.

அதே நேரத்தில் இரு தரப்பு வணிக நோக்கத்திற்காக அந்தப் பகுதியில் கடல் வழி போக்குவரத்து இருந்து வந்தது. பெரும் கப்பல்கள் அடிக்கடி போய் விட்டு வந்ததினால் படகு போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதற்காக பாலம் வழியாக இரண்டு எல்லையையும் இணைக்கலாமா? என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

பிறகு ஆராய்ச்சியாளர்களின் ஆலோசனைப் படி, ஒரு பகுதியை பாலமாகவும். மறுபகுதியை சுரங்கமாகவும் அமைக்கலாம், இரண்டு பகுதியையும் செயற்கை தீவு அமைத்து இணைக்கலாம் அப்படி என்று முடிவு செய்திருக்கிறார்கள். மேலும் செயற்கைத் தீவு அமைத்து சுரங்கத்தைக் கொண்டு வந்தால் கப்பல் போக்குவரத்து தடைபடாது என்று திட்டமிட்டு உருவானதுதான் பெபரகாம்.

அதே நேரத்தில் இந்தச் செயற்கைத் தீவு கடற்வாழ் உயி ரினங்களுக்கும், பறவைகளுக்கும் ஒரு தங்குமிடமாக மாறிப்போனதைக் கண்டு இரண்டு நாட்டு அரசுகளுமே மகிழ்ச்சியாக இருக்கின்றன.

துபாயில் கடலுக்குள் பிரமாண்ட ஹோட்டல்!

துபாயில் கடலில் ஒரு செயற்கைத் தீவு அமைக்கப்பட்டு அதில் ஒரு ஹோட்டல் கட்டப்பட்டிருக்கிறது. குர்ஜல் ஹாரோ. இதுவும் துபாயில் தான் இருக்கிறது. துபாயைச் சேர்ந்த ஒரு ஹோட்டல் நிறுவனம். வித்தியாசமான வடிவமைப்பில் ஒரு ஹோட்டலைக் கட்டவேண்டும் என்று முடிவு செய்தது. அதற்கென்று ஆர்டிக்டெத் என்பவரை அணுகியது, அவரைப் பொறுத்தவரை ஒரு கட்டுமானம் செய்யணும்ன்னா அது அந்த இடத்தில் அடையாளமாக இருக்கணும் என்று சொன்னார்.

இதற்காக சுமேரா கடற்பகுதியில் உள்ள செயற்கைத் தீவில் இடம் வாங்கினாங்க, ஈபிள் டவர் போலவும், சிட்டி போலவும் பார்த்ததும் அடையாளம் கண்டுகொள்கின்ற மாதிரி இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து கட்டப்பட்டதுதான் இந்த ஹோட்டல். இன்றைக்கும் அதன் வடிவமைப்பும் கட்டுமானமும் துபாயின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு ஐரோப்பாவில் கடலில் தேவாலயம்!

தெற்கு ஐரோப்பாவில் இருக்கக் கூடிய ஒரு அழகான நாடு மோட்டோரினிக்கோ. இங்கே இருக்கக் கூடிய அழகான நகரம்தான் கொட்டோர். அங்கே கடலில் தேவாலயம் அமைக்க முடிவெடுக்கப்பட்டு பாறைகளை உடைத்து வந்து கடலுக்குள் வீசுறாங்க, பாறைகள் முழுக்க கொட்டப்பட்டதால் அது திட்டாக மாறுகிறது.

இப்போது இதனை செய்யவில்லை, பெரிய அளவில் கட்டுமானத் தொழில் நுட்பம் இல்லாத அந்தக் காலத்தில் இதனை செய்திருக்கிறார்கள்., பின்னர் பாறைகளைக் கொண்டே அங்கே தேவாலயத்தை கட்டி இருக்கிறார்கள். அதோடு ஒரு அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது, இப்போது மக்கள் பாலத்தின் வழியாகவும் படகு வழியாகவும் அந்த ஆலயத்திற்கும் அருங்காட்சியகத்துக்கும் போய் வருகிறார்கள்.

அரபிக் கடலில் சத்ரபதி சிவாஜிக்கு நினைவிடம்!

மும்பை கடற்கரையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் அரபிக் கடலில் மஹாராஷ்டிர அரசு சார்பாக மராட்டிய மன்னர் சத்திரபதி சிவாஜிக்கு பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்பட்டது. இந்த நினைவிடம் ஏறக்குறைய 3,600 கோடி ரூபாய் செலவில் உருவாக்கத் திட்டமிடப்படடது. இந்த நினைவிடத்தில் குதிரை மீது சிவாஜி அமர்ந்து இருப்பதைப் போல 212 மீட்டர் உயரத்திற்கு சிலை அமைக் கப்படவிருக்கிறது.

இந்தியாவின் முதல் கடல் பாலம் – பாம்பன்!

இந்தியாவின் முதல் கடல் பாலம், பாம்பன். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தையும் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் தீவையும் இணைக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. 2.3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் இந்தியாவின் மிக நீளமாக உள்ள கடல்பாலம்.

முதலாமாவது நீளமான கடல்பாலம் 2010 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாந்திரா வொர்லி கடற்பாலம், பாந்த்ரா மற்றும் வொர்லி இடையே கடல் நீருக்கு மேலே 5600 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் இவை கடலில் இயற்கையாக அமைந்துள்ள பாறைகள் மீது கட்டப்பட்டுள்ளன.

கடலில் மிதக்கக் கூடிய ஹோட்டல்கள், கடலுக்கு அடியில் அருங்காட்சியகங்கள் இப்படி கடலில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் பல மும்பையில் மராட்டிய அரசால் அமைக்கப்படும் சத்ரபதி சிவாஜி உருவச்சிலையை முன்னுதாரணமாகக் கொண்டு கலைஞர் நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது என்று சொல்லியிருக்கிறது தி.மு.க. அரசு. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Also Read: “குரைப்போர் குரைக்கட்டும்.. பிஸ்கெட் வீச நமக்கு நேரமில்லை” : சிந்தனையில் சீழ் பிடித்த ஈனர்களுக்கு பதிலடி!