Viral
பட்டத்தோடு சேர்த்து பறந்த குழந்தை: பட்டம் விடும்போது நேர்ந்த விபரீதம் - வீடியோ உண்மையா ?
இணைய ஊடகம் அதிகரித்து விட்டதால் அடிக்கடி சில வீடியோக்கள் வைரலாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோவில் சொல்லப்படும் செய்திகள் உண்மைதானா என்பதைப் பற்றி நாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் அதை அப்படியே நம்பி விடுவது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதை இந்த வீடியோ நமக்கு உணர்த்தி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பட்டம் விடும் விழாவின்போது 3 வயதுக் குழந்தை ஒன்று பட்டத்தோடு பறந்து சென்றதாக வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் அது உண்மை என நம்பி தாங்களும் தங்களது சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் செய்தி ஊடகங்கள் கூட இந்த வீடியோவை செய்தியாக வெளியிட்டுள்ளது.
ஆனால், இப்படி ஒரு சம்பவம் குஜராத்தில் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. 2020ம் ஆண்டு தைவான் நாட்டில் நடந்த பட்டம் விடும் விழாவின்போதுதான் குழந்தை ஒன்று பட்டத்தோடு சேர்ந்து பரந்தது.
இந்த வீடியோதான் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது குஜராத்தில் நடந்ததுபோல் பரவி வருகிறது. மேலும் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வீடியோ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் குஜராத்தில் நடந்த பட்டம் விடும் விழாவில் பட்டத்தோடு குழந்தை பரக்கவில்லை என்று இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
Also Read
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!
-
அதானியை காப்பாற்ற 35 ஆயிரம் கோடி LIC நிதியை வழங்கிய ஒன்றிய பாஜக அரசு... அம்பலப்படுத்திய பிரபல நாளிதழ் !
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!