Viral

Netflix பயனர்களா நீங்கள்..? NEW YEARக்கு OFFER கொடுத்த நிறுவனம்.. அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தவர்களுக்கு பெரிய உதவியாக இருந்தது டிஜிட்டல் தளங்கள்தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி சினிமா முதல் சீரியல் வரை பலவற்றையும் பார்த்து பொழுதுகளை கழித்தனர்.

அப்போதுதான் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஓடிடி தளங்கள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் எப்போது வேண்டுமானாலும் படங்களைப் பார்த்துக் கொள்ள முடியும் என்பதால் பலரும் இந்த ஓடிடி தளங்களைப் பயன்படுத்தத் துவங்கினர்.

ஒரு மாதம், 6 மாதம், ஒரு வருடன் என சந்தா பணம் கட்டி ஓடிடி தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தனது கணக்கை நண்பர்கள், உறவினர்கள் பயன்படுத்தவும் கொடுத்து வருகின்றனர். இது ஓடிடி தளங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதால் ஒரு கணக்கை 5 பேர் மட்டுமே பகிர்ந்து கொள்ளும் வகையில் புதிய திட்டத்தைக் கொண்டு வந்தனர்.

இது ஒவ்வொரு ஓடிடி தளத்திற்கு ஏற்ப திட்டங்கள் உள்ளன. இதில் தங்களுக்குப் பிடித்த திட்டங்களைச் சந்தா பணம் செலுத்தி பலரும் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தைத்தான் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் கூட கொரோனாவிற்கு பிறகு நெட்ஃப்ளிக்ஸ் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால்தான் கடந்த ஆண்டு இந்தியாவிற்கு என்று சிறப்புச் சலுகையையும் நெட்ஃப்ளிக்ஸ் அறிமுகம் செய்தது.

இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள நெட்ஃப்ளிக்ஸ் பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது 2023ம் ஆண்டு முதல் நெட்ஃப்ளிக்ஸ் பயனர் ஒருவர் தனது கணக்கில் பாஸ்வேர்டை வேறு யாருக்கும் பகிர்ந்து கொள்ள முடியாது.

உலகம் முழுவதும் 222 மில்லியன் பேர் நெட்ஃப்ளிக்ஸ் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் 100 மில்லியன் பேர் தங்களின் கணக்குகளை பலருக்கும் பகிர்ந்து வருகின்றனர். இதனால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

இதை தடுக்கும் விதமாகத்தான் நெட்ஃப்ளிக்ஸ் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதேபோல் கணக்கைப் பகிர்ந்து கொள்வது குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் நெட்ஃப்ளிக்ஸ் எச்சரிக்கை செய்துள்ளது.

Also Read: யாருக்கும் கிடைக்காத பெருமை.. உலகக்கோப்பை வென்றுகொடுத்த மெஸ்ஸியை கௌரவிக்க அர்ஜெண்டினா அரசு திட்டம் !