Viral
சாலையில் சும்மா நின்று கொண்டிருந்த சிறுமி.. திடீரென்று தூக்கி வீசிய மர்ம ஆசாமி.. கேரளாவை பதறவைத்த VIDEO!
சாலையில் சும்மா நின்று கொண்டிருந்த சிறுமியை அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கீழே தூக்கி போட்டு சென்றுள்ளது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை உருவாக்கியுள்ளது.
கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியை அடுத்து மஞ்சேஷ்வர் என்ற இடத்தில் இஸ்லாமியர்களின் மதரஸா பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இங்கு பயிலும் 8 வயது இஸ்லாமிய சிறுமி ஒருவர் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் தனது மாமா அழைத்து செல்வார் என்று காத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த உடல் பருமனாக இருக்கும் மர்ம நபர் ஒருவர் சிறுமி அருகே சென்றுள்ளார். பிறகு சிறுமியை தனது இரு கைகளை கொண்டு தூக்கி அதே ரோட்டில் சட்டென்று போட்டுவிட்டு சென்றுள்ளார். இதில் நிலைகுலைந்து போன சிறுமி, சாலையோரமாக அமர்ந்து அழுதுகொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த சிறுமியின் மாமா, சிறுமியிடம் அழுதுகொண்டிருப்பதற்கான காரணத்தை குறித்து கேட்டுள்ளார். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்தவை குறித்து கூறி அழுதுள்ளார். பின்னர் இது தொடர்பாக அந்த பகுதி சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, அதில் அந்த மர்ம நபர் முகம் பதிவாகியிருந்தது.
தொடர்ந்து இது குறித்து காவல்துறையில் சிறுமி குடும்பத்தினர் புகார் செய்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று விசாரித்தனர். மேலும் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அதன்பேரில் விசாரித்ததில், அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (வயது 40) என்று தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி, போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாலையில் சும்மா நின்று கொண்டிருந்த சிறுமியை அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கீழே தூக்கி போட்டு சென்றுள்ளநபரின் செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு துணைபோகும் ஒன்றிய பாஜக அரசு... திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் !
-
விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம்... சென்னையில் எந்தெந்த இடங்கள் வழியாக கொண்டுசெல்லலாம்... விவரம் உள்ளே !
-
அமெரிக்காவின் வரி உயர்வால் பாதிக்கப்படும் தமிழ்நாடு... ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க கி.வீரமணி கோரிக்கை !
-
டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு... தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஆணையத் தலைவராக நியமனம் !
-
தமிழ்நாட்டில் 1 லட்சம் பேருக்கு 194 டாக்டர்கள் : இந்திய சராசரியை விட இரு மடங்கு அதிகம் பெற்று சாதனை!