தமிழ்நாடு

நண்பனிடமே திருட சொல்லி ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த திருடன்.. தட்டி தூக்கிய மதுரை போலிஸ்.. சிக்கியது எப்படி ?

நண்பனிடமே வழிப்பறி செய்து திருட சொல்லி ஸ்கெட்ச் போட்டு கொடுத்த திருடனின் செயல் பெரும் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நண்பனிடமே திருட சொல்லி ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த திருடன்.. தட்டி தூக்கிய மதுரை போலிஸ்.. சிக்கியது எப்படி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நண்பனிடமே வழிப்பறி செய்து திருட சொல்லி ஸ்கெட்ச் போட்டு கொடுத்த திருடனின் செயல் பெரும் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கான்பாளையம் பகுதியில் சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவராக இருப்பவர் பாலாஜி. சம்பவத்தன்று இவர் தனது நண்பரான இஸ்மாயில் என்பவருடன் பேசிக்கொண்டே வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவர்கள் இருவரும் தனியே வருவதை கண்ட இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இவர்களை மிரட்டியது. மேலும் தனது கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி இருவரிடமும் கொள்ளையடிக்க முற்பட்டது.

நண்பனிடமே திருட சொல்லி ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த திருடன்.. தட்டி தூக்கிய மதுரை போலிஸ்.. சிக்கியது எப்படி ?

அப்போது பாலாஜி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க செயினை கண்ட திருடர்கள், அவரை மிரட்டி செயினை பறித்து சென்றுள்ளனர். இதையடுத்து இது குறித்து பாதிக்கப்பட்ட பாலாஜி காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரது நண்பரிடமும் விசாரித்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு கொள்ளைக்கும்பல் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரிக்கையில், இந்த கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டது பாலாஜியின் நண்பர் இஸ்மாயில் என்பது தெரியவந்தது.

நண்பனிடமே திருட சொல்லி ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த திருடன்.. தட்டி தூக்கிய மதுரை போலிஸ்.. சிக்கியது எப்படி ?

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கொள்ளையில் ஈடுபட்ட சுந்தர வர்மா, ஆதிஸ்வரன், தினேஷ், மவுந்தள் ஆகியோரையும் கைது செய்து விசாரித்தனர். அப்போது இஸ்மாயில் தான் இவர்களுக்கு திட்டம் தீட்டி கொடுத்ததும், ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

நண்பனிடமே திருட சொல்லி ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த திருடன்.. தட்டி தூக்கிய மதுரை போலிஸ்.. சிக்கியது எப்படி ?

மேலும் இஸ்மாயிலுக்கு பணத்தேவை இருந்ததால் தனது நண்பனிடம், மற்ற நண்பர்களை வைத்து வழிப்பறி செய்து 8 சவரன் தங்க நகையை கொள்ளையடித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

சொந்த நண்பனிடமே ஆட்களை அனுப்பி நகையை வழிப்பறி செய்த சக நண்பனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories