Viral
உலகம் முழுவதும் திடீரென முடங்கிய WHATSAPP.. திண்டாடும் மக்கள் : சேவை பாதிப்புக்கு என்ன காரணம்?
இந்தியர்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் பயன்படுத்தும் ஒரு செயலியாக முன்னிலையில் இருப்பது வாட்ஸ் அப். இந்த செயலியானது தற்போது 'Meta' வசம் சென்ற பிறகு அடிக்கடி பல்வேறு அப்டேட்களை அள்ளிக்கொடுக்கிறது.
அந்த வகையில், சமீபத்தில் வாட்ஸ் அப் Privacy-ல் Last Seen, Status, About போன்றவற்றை மட்டுமே இதுவரையில் கட்டுப்படுத்தி வந்த நிலையில், தற்போது DP என்று சொல்லப்படுகிற வாட்ஸ் அப் Display Picture (Profile Picture)-ஐ விருப்பட்டவர்களுக்கு மட்டும் தெரியும்படி வைக்கலாம் என புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதேநேரத்தில், போலி கணக்குகள், தவறான செய்திகளை பரப்புதல் போன்ற சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கி வருகிறது. இதன் காரணமாக வாட்ஸ்அப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இறங்கியது. பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்திய அந்நிறுவனம் பல்வேறு கணக்குகளையும் முடக்கி வருகிறது. அரசின் புதிய விதிகள் காரணமாகவும் இந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே சமீபத்தில் வாட்ஸ் அப் ஹேக்கர் ஹேக் செய்ய முயற்சிப்பதாகவும், எந்த லிங்க் வந்தாலும் ஓபன் செய்யவேண்டாம் எனவும் அறிவிறுத்தப்பட்டனர். இந்நிலையில், உலகம் முழுவதும் நேற்று இரவில் இருந்து வாட்ஸ் ஆப் முடங்கியுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலும் வாட்ஸ் அப் சேவை முடங்கியதால், படங்கள் வீடியோ அனுப்புவதிலும், பெறுவதிலும் பிரச்சனை உள்ளதாக பயனகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் தனிநபருக்கு அனுப்பும் தகவல் கூட பரிமாறமுடியாத சூழல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வாட்ஸ் அப் விரைவில் மீட்க நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாக கூறுகையில், “வாட்ஸ் அப் குறுஞ்செய்திகள் அனுப்புவதில் சிலருக்கு சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம்; விரைவில் வாட்ஸ் அப்பை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” என விளக்கம் அளித்துள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!