Viral
கோமாவில் 2 மாதம் சிகிச்சை.. முன்னாள் பிரேசில் அழகி மரணம் - அறுவை சிகிச்சை காரணமா ? : பகீர் தகவல்!
பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் அழகி கிளெய்சி கொரிய்யா. இவர் 2018ம் ஆண்டு பிரேசிலின் மிஸ் பிரேசில் பட்டம் பெற்றார். தென்கிழக்கு நகரமான மெகோயில் நிரந்தர ஒப்பனை நிபுணராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு டான்சில் பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார். அறுவை சிசிச்சை செய்துக்கொண்ட அடுத்த 5 நாட்களில் அவரது உடல் நிலை மோசமாகியுள்ளது.
இதனையடுத்து உடனே மருத்துவமனைக்கு கிளெய்சி கொரிய்யா அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது அவரின் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சையின் போதே கடந்த ஏப்ரல் மாதம் கிளெய்சி கொரிய்யாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு, சுயநினைவை இழந்தார். இந்நிலையில் வருக்கு இரண்டு மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையிடம் விசாரணை நடத்த வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
2026-ல் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு போட்டிகள்! : துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!
-
சிறுவர் - சிறுமியினர் டவுசர் அணியத் தடை... பாஜக ஆளும் உ.பி. கிராமத்தின் உத்தரவால் ஷாக்! - பின்னணி என்ன?
-
பொருநையை தொடர்ந்து தஞ்சையில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் : டெண்டர் வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
-
“நயினார் நாகேந்திரனின் எண்ணம் தமிழ்நாட்டில் எடுபடாது” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
பிராட்வேயில் ரூ.23 கோடியில் “முதல்வர் படைப்பகம் & நவீன நூலகம்”... அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர்!