Viral
“ட்விட்டரில் வருகிறது Edit வசதி - ஆனால், ஒரு கண்டிஷன்..” : அறிமுகமாகும் புதிய வசதிகள் என்னென்ன தெரியுமா?
உலக அளவில் பிரபலமான இரண்டு சமூக வலைத்தளங்கள் என்றால் அது பேஸ்புக்கும் ட்விட்டரும்தான். இதில் தனி ஒருவரோ அல்லது பிரபலங்களோ தெரிவிக்கும் கருத்துக்கள் சில வைராலாவது வழக்கம்.
இதில் பேஸ்புக்கில் தவறாக பதியப்படும் கருத்துக்களை நீக்கவோ, எடிட் செய்யவோ இயலும். ஆனால், ட்விட்டரில் பதியப்படும் கருத்துக்களை எடிட் செய்ய இயலாது. மாறாக தவறான அந்த பதிவை நீக்கத்தான் முடியும்.
இதன் காரணமாக ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவேண்டும் என அதன் பயனர்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப்போவதாக அறிவித்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கும் ட்விட்டரில் எடிட் செய்யும் வசதி வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், பயனர்களின் நீண்டநாள் கோரிக்கையை பரிசீலித்து எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்த ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், பேஸ்புக் போல அனைத்து பதிவுகளுக்கும் இந்த வசதியை அளிக்காமல் சில பதிவுகளுக்கு மட்டுமே இந்த வசதியை அறிமுகப்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்த வசதியின் மூலம் பிறரை புண்படுத்தும் சில பதிவுகளுக்காக, ட்விட்டர் 3 வகையான விருப்பங்களைக் காட்டும் எனவும், அந்த விருப்பங்களில் பதிவை நீக்குதல், எடிட் செய்தல் மற்றும் ட்வீட்டை பதிவு செய்தல் ஆகிய வசதிகள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை ட்விட்டர் நிர்வாகம் வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
ரூ.50 இலட்சத்தில் பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவனுக்கு திருவுருவச் சிலை... திறந்து வைத்தார் முதலமைச்சர் !
-
“தமிழ்நாட்டில் பொய்யும், ஒப்பனையும், கற்பனையும் ஒருபோதும் நீடிக்காது” - RN ரவிக்கு கி.வீரமணி பதிலடி!
-
ஈரோடு மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன?
-
“திமிரெடுத்து பேசும் ஆளுநர் ஆர்.என்.ரவி.யின் திமிரை நாம் அடக்க வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ஈரோடு - 1,84,491 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் : 23 புதிய திட்டப் பணிகள்!