Viral
‘ஃப்பா என்னா வெயிலு.. கூல்டிரிங்ஸ் குடுப்பா..”: பெட்டிக்கடையில் ரெகுலர் கஸ்டமரான குரங்கு !
கடலூர் மாவட்டம் வேப்பூர் சுற்றுவட்டாரத்தில் காடுகள் அதிகமாக உள்ளன. அந்த பகுதியில் குரங்குகளில் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். இந்தநிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 5 அறிவு உயிரினங்கள் அனைத்தும் தண்ணீரைத் தேடி அலைந்துக் கொண்டிருக்கின்றன.
விலங்குகளை நேசிக்கும் சில மனிதர்கள் அவைகளுக்கு தண்ணீரும், உணவும் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகியது.
இந்தநிலையில், வேப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு மளிகை கடைக்கு தினமும் ஒரு குரங்கு வருந்து அங்கு கூல்டிரிங்ஸை வாங்கிக் குடித்துவிட்டு யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் ரெகுலர் கஸ்மர் போல் வந்து செல்கிறது.
கடைக்காரர் குரங்கிற்கு ஸ்வீட் பன்-னை கொடுக்கிறார். ஆனால் அந்த குரங்கு அதை வாங்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது. பின்பு கடைக்காரர் சென்று கூல்ட்ரிங்க்ஸை கொண்டு வந்து கொடுத்ததும் அதை உடனே வாங்கி குடிப்பது வாடிக்கையாளர்களை வியப்பூட்டுகிறது.
அடிக்கிற வெயிலுக்கு பன்னு வேண்டாம், கூல்டிரிங்ஸ் கொடுங்கப்பா என்பது போன்று காணப்படுகிறது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை எந்த தொந்தரவும் செய்யாததால் பொதுமக்களும் அங்குள்ள குரங்குகளுக்கு உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!