Viral
சைக்கிள் கேப்பில் 2 பெண்களுடன் காதல்: பூவா தலையா போட்டு திருமணம் செய்து வைத்த ஊர் பஞ்சாயத்து!
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தின் சக்லேஷ்பூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதான இளைஞர். இவருக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கும் மேல் காதல் உறவு இருந்துள்ளது.
இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு வேறொரு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணையும் மேற்குறிப்பிட்ட இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் என சாமர்த்தியமாக சுற்றித்திரிந்திருக்கிறார்.
இப்படி இருக்கையில், அண்மையில் பெண் ஒருவருடன் அந்த இளைஞன் பழகுவதை கண்டு உறவினர் ஒருவர் அவரது தந்தையிடம் கூற, இது குறித்து விசாரித்திருக்கிறார். அப்போது, தான் அந்த பெண்ணை காதலிப்பதாகவும் அவரை மணமுடிக்க விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.
ஆனால் அந்த தந்தை சம்மதிக்காமல் வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடத்தப்பட்டதை அறிந்த இரு பெண்களும் தங்களது வீட்டில் விவகாரத்தை எடுத்துரைத்து பையன் வீட்டிற்குச் சென்று பேச முற்பட்டிருக்கிறார்கள்.
அப்போதுதான் அந்த இளைஞனின் திருவிளையாடல்கள் வெளியே தெரியவர, விவகாரம் ஊர் பஞ்சாயத்திடம் சென்றது. அப்போது யாரை திருமணம் செய்துக்கொள்கிறாய் என கேட்டபோது அந்த இளைஞர் ஏதும் பேசாது இருந்ததால் முதல் காதலி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
இதனையடுத்து மீண்டும் கூடிய பஞ்சாயத்தின் போது முன்பு கேட்ட அதே கேள்வியை கேட்டும் இளைஞர் மவுனம் சாதித்திருக்கிறார். அதனால் மூன்று வீட்டார் மற்றும் வழக்கறிஞரின் முன்னிலையில் பஞ்சாயத்தின் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் இது குறித்து போலிஸ், கோர்ட், மீடியா என செல்லக்கூடாது எனவும் கேட்டு கையெழுத்து பெற்று ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
பெண் மற்றும் பையன் வீட்டாரின் சம்மதத்தை அடுத்து பூவா தலையா போட்டு பார்த்து யாரை திருமணம் செய்து வைப்பது என முடிவெடுத்திருக்கிறார்கள். அதில் முதலில் காதலித்த பெண்ணே வென்றிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த இரண்டாவது காதலி முதல் காதலியை வாழ்த்தியதோடு, அந்த இளைஞருக்கு பாளாரென அடியை கொடுத்து உன்னை விட அருமையான வாழ்க்கையை நான் வாழ்ந்து காட்டுகிறேன் என சவால்விட்டுச் சென்றிருக்கிறார்.
சினிமாவை காட்டிலும் படு சுவாரஸ்யமாக அமைந்துள்ள இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் காரசாரமான பேசு பொருளாகியுள்ளது.
Also Read
-
நீதித்துறை குறித்த அமித்ஷாவின் சர்ச்சை கருத்து.... பொங்கி எழுந்த 18 முன்னாள் நீதிபதிகள்... விவரம் என்ன ?
-
“மக்களுக்கான திட்டங்களை சீர்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசு!” : TOI நாளிதழுக்கு முதலமைச்சர் சிறப்பு கட்டுரை!
-
சென்னையில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் : சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு !
-
“அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற முழு மூச்சுடன் பாடுபடுவேன்!” : சென்னையில் நீதியரசர் சுதர்சன் உறுதி!
-
எடப்பாடி பழனிசாமியின் மிரட்டல் எதிரொலி... ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்க முயன்ற அதிமுகவினர் !