Viral
“ரவிவர்மாவின் ஓவியங்களாக மாறிய நடிகைகள்” : சமந்தா, ஸ்ருதிஹாசன், குஷ்பூ என வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகையும், இயக்குநருமான சுஹாசினி மணிரத்னம், நாம் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார். சமுதாயத்தில் உழைக்கும் ஒற்றைப் பெண்களின் மேம்பாட்டிற்காக இந்த அறக்கட்டளை செயலாற்றி வருகிறது.
இந்த அறக்கட்டளையின் 10ஆம் ஆண்டு விழாவினை கொண்டாடும் வகையில் பெண்களை சிறப்பிக்கும் காலண்டர் ஒன்று உருவாகி வருகிறது. இதனடிப்படையில் பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியங்களுக்கு உயிரோட்டம் அளிக்கும் வகையில் ரவிவர்மா வரைந்த அக்கால பெண்களைப் போன்று நடிகைகளைக் கொண்டு மேற்படி காலண்டர் தயாரிக்கப்படுகிறது.
இதற்காக நடிகைகள் குஷ்பூ, சமந்தா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், ஷோபனா உள்ளிட்ட 12 நடிகைகள் ரவிவர்மாவின் ஓவியங்களுக்கு மாடலாக போஸ் கொடுத்து, அந்த ஓவியங்களுக்கு உயிரூட்டியுள்ளனர்.
நடிகைகளின் மாடல் புகைப்படங்களை பிரபல புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!