Viral

திருமணத்திற்கு வந்தவர்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலித்த மணமகள் : பொங்கிய உறவினர்கள் - வெளிவந்த உண்மை!

அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற திருமணத்தில் வித்தியாசமான நிகழ்வு நடைபெற்றுள்ளது. விருந்தினர்கள் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்றால், நுழைவுக்கட்டணமாக 50 டாலர் செலுத்தவேண்டும் என மணமகள் தெரிவித்துள்ளார்.

நுழைவுக்கட்டணம் செலுத்துபவர்களுக்கு திருமண விழாவில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்றும் அவர்கள் எங்கும் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் 'பிரத்யேக விருந்தினர் பட்டியலில்' இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து, பலரும் நுழைவுக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

மணமகளின் உறவுக்காரப் பெண்ணுக்கு திருமணம் நடக்கும் இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் பெற்றோர் பணம் கொடுக்க முன்வந்துள்ளனர். இருப்பினும், அந்த பெண் அதனை மறுத்து, மணமகளின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

பின்னர் இந்தச் சம்பவத்தை அவர் சமூகவலைதளத்தில் எழுதியுள்ளார். பலரும் மணமகளை கேலி செய்துள்ளனர். மேலும், விருந்தினர்களை பணம் செலுத்துமாறு கேட்பது மூர்க்கத்தனமானது என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திருமணத்திற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டவே மணமகள் இவ்வாறான நிபந்தனைகளை விதித்தது தெரியவந்துள்ளது.