Viral

திருமண ஊர்வலத்தின்போது கொட்டிய ரூ. 90 லட்சம் பணமழை... குஜராத்தில் விநோத பழக்கம்!

குஜராத்தில் திருமண ஊர்வலத்தில் மணமகன் வீட்டார் ரூபாய் 90 லட்சம் மதிப்பிலான பணமழையுடன் ஊர்வலமாகச் சென்று ஹெலிகாப்டரில் பறந்து திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்தேறியுள்ளது.

வடமாநிலங்களில் திருமண நிகழ்வு உள்ளிட்ட விழாக்களில் ரூபாய் நோட்டுகளை வீசி எறிவது வழக்கம். குஜராத்தின் ஜாம் நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ரிஷி ராஜ் சிங் ஜடேஜாவின் திருமண ஊர்வலத்தில் பல லட்சக் கணக்கில் பணம் வாரியிறைக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 30ம் தேதி நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் மணமகன் வீட்டார் மற்றும் நண்பர்கள் சேர்ந்து பண மழை பொழிந்தனர். ரூபாய் 90 லட்சம் மதிப்பிலான பணத்தை வாரியிறைத்ததாக மணமகன் வீட்டார் தெரிவித்துள்ளனர்.

பணமழையில் நனைந்த மணமக்கள், பின்னர் ஹெலிகாப்டரில் பறந்து கண்ட் என்ற கிராமத்திற்கு சென்றனர். மேலும், மணமகனின் அண்ணன், ரூபாய் 1 கோடி மதிப்பிலான காரை மணமக்களுக்குப் பரிசாக அளித்துள்ளார்.

Also Read: கொல்கத்தாவில் பணமழை பொழிந்த தனியார் நிறுவனம்: காரணம் இதுதான்! (வைரல் வீடியோ)