தேர்தல் 2024

மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது, ராஜ்பவனில் பணிபுரியும் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 2 கட்ட தேர்தல் நிறைவடைந்துவிட்டது. அடுத்தகட்ட தேர்தலுக்காக NDA மற்றும் இந்தியா கூட்டணி காட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் தற்போது பாஜகவுக்கு எதிராக மக்கள் எழுந்துள்ளதை காண முடிகிறது. மக்கள் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர்.

மக்களுக்கு விரோதமாக செயல்படும் பாஜகவை, இந்த தேர்தலில் அவர்களே வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டனர். நாடு முழுவதும் மக்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் மக்கள் ஆரவார வரவேற்பு அளித்து வருவதோடு, பிரசாரம் மேற்கொள்ள செல்லும் பாஜக நிர்வாகிகளை மக்கள் ஓட ஓட விரட்டி வருகின்றனர்.

மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !

இருப்பினும் பாஜகவும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தல் வருங்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகவே பலராலும் பார்க்க முடிகிறது. எனவே இது மிகவும் முக்கியமான தேர்தல் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் மோடியோ, தனது பிரசாரத்தின்போது வெறுப்பை விதைக்கும் வகையில் பேசி பலர் மத்தியிலும் கண்டனங்களை பெற்று வருகிறார்.

எனினும் தனது தேர்தல் பிரசாரத்தை தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவிற்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சென்றுள்ளார். இந்த சூழலில் அம்மாநில ஆளுநர் சி.வி.அனந்த போஸ் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !

மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருப்பவர் சி.வி.அனந்த போஸ். இந்த சூழலில் ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பெண் ஒருவர், ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில், ஆளுநர் சி.வி.அனந்த போஸ் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, மேற்கு வங்க அரசியலால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா சென்றுள்ள மோடி, இன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், ஆளுநர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !

ஏற்கனவே கர்நாடகா மாநிலம் பாஜக கூட்டணி கட்சியான JDS எம்.பி மீது பாலியல் புகார் சர்ச்சையும், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லைக்கொடுத்த பாஜக எம்.பி பிரிஜ் பூசனின் தொகுதியில் போட்டியிட அவரது மகனுக்கே வாய்ப்பு கொடுத்துள்ள விவகாரமும் கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில், ஆளுநர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories