Viral
இறந்த குழந்தையை புதைக்க குழிதோண்டிய தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்யம்!
உத்தரபிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் ஹிதேஷ் குமார் சிரோஹி. அவரது மனைவி வைஷாலி, சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
7 மாத கர்ப்பமாக இருந்த வைஷாலிக்கு பரேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குறைப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த சில நிமிடங்களிலேயே அந்தக் குழந்தை இறந்துவிட்டது.
இதையடுத்து, இறந்த குழந்தையைப் புதைப்பதற்காக சிரோஹி, மயானத்தில் 3 அடி ஆழத்தில் பள்ளம் வெட்டியபோது மண்ணில் ஒரு பானை கிடைத்தது. அந்தப் பானையை திறந்து பார்த்தபோது அதில் உயிருடன் ஒரு பெண் குழந்தை மூச்சுவிடப் போராடிக் கொண்டிருந்தது.
இதையடுத்து அந்தக் குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தார் சிரோஹி. இதுகுறித்து அப்பகுதி போலிஸாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், அதுகுறித்து பரேலி எஸ்.பி அபிநந்தன்சிங், “அந்தக் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான உதவிகளைச் செய்வதாக பிதாரி சைன்பூர் எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். குழந்தையின் தாய் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.
தோண்டப்பட்ட குழியில் குழந்தை உயிருடன் கிடைத்த நிகழ்வு அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!