Viral
மனைவியின் பிரசவ வலியைப் போக்க ‘காதல் புத்தகம்’ : பாசக்கார கணவரின் நெகிழ்ச்சியான செயல்- வைரலாகும் வீடியோ!
ஜார்ஜியாவைச் சேர்ந்தவர் கெண்டல் கேவர். இவரது மனைவி ஜாஸ்மின் கேவர். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் மகப்பேறுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
தனது மனைவியின் பிரசவ வலியை போக்குவதற்காகவும், அவரை மகிழ்ச்சியடையச் செய்வதற்காகவும் கெண்டல் கேவர் தனித்துவமான ‘காதல் புத்தகம்’ ஒன்று தயாரித்து தனது மனைவியிடம் பக்கம் பக்கமாக காண்பிக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இரண்டு நாள் உழைப்பின் மூலம் தனது மனைவிக்கு உதவிய கெண்டல் என்ற பாசக்கார கணவரின் இந்த தனித்துவமான யோசனை இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. கெண்டல் தன் மனைவி முன்னிலையில் புத்தகத்தின் பக்கங்களை புரட்டும் வீடியோவை இதுவரை 2.5 மில்லியனுக்கும் மேலானோர் கண்டுகளித்துள்ளனர்.
நான்கு நிமிடங்களுக்கும் குறைவான நீளமுள்ள இந்த வீடியோவில் கெண்டல் கேவர், காதல் புத்தகத்தின் முதல் பக்கம், ‘மூச்சு விடு’ என்ற வார்த்தையுடன் தொடங்குகிறது. பின்னர், இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்துக் கொண்டதைப் பற்றியும், பகிர்ந்துகொண்ட நகைச்சுவைகள் குறித்தும் பேசுகிறது.
கெண்டல் கேவர் ஒவ்வொரு பக்கமாக திருப்பும்போது, அதனை ஜாஸ்மின் வலியோடு தன் வயிற்றைத் தடவிக்கொண்டே ரசிக்கிறார். இந்த வீடியோவை பார்த்தவர்கள், இது ஒரு அற்புதம் என்று புகழ்ந்து வருகின்றனர்.
ஏறத்தாழ 57,000 பேர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். 30,000-த்திற்கும் மேற்பட்டோர் பாராட்டியும், கருத்து தெரிவித்தும் உள்ளனர்.
ஃபேஸ்புக் பயனாளர் ஒருவர் கூறுகையில், “இது மிகவும் அற்புதமான அழகான நிகழ்வாகவும் இதயப்பூர்வமானதாகவும் இருக்கிறது. நான் இங்கே முழுமையான கண்ணீருடன் அமர்ந்திருக்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோன்று பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை நீங்களும் கண்டுகளியுங்கள்.
Also Read
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
-
பாரதிதாசன் விவகாரம் : “பொய் சொல்வதை அமைச்சர் வன்னி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” - கோவி.செழியன் பதிலடி!
-
“தலைமை நீதிபதி அவமதிப்பு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி!
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!
-
“உரிய முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!