Viral
இந்திய ரசிகர்ளுக்காக நெட்ஃப்ளிக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள அதிரடி ஆஃபர்!
உலகம் முழுவதும் வெப் சீரிஸ்களை பார்ப்பதில் மக்கள் அதிக நாட்டம் செலுத்தி வருகின்றனர். எந்த நேரத்திலும் மொபைல் மூலம் அவற்றைப் பார்க்க முடிவதால் அதற்கென தனியாக சந்தா கட்டி தேவையான எபிசோட்களை டவுன்லோட் செய்தும் கண்டுகளித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்தியாவில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்குக்கு இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும், ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் போன்றவற்றில் பண்டிகை கால சலுகை உட்பட பல்வேறு சலுகைகளை சந்தாதாரர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் ஸ்மார்ட் ஃபோன் பயனாளர்கள் பெரும்பாலும் வீட்டில் தொலைக்காட்சி இருந்தாலும் அதிலும் மொபைல் ஃபோன்களை கனெக்ட் செய்து ஆன்லைன் சீரிஸ்களை பார்ப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில், சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், இந்திய பயனாளர்களுக்காக அதிரடியாக 199 ரூபாயில் புதிய சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது, ஒரே ஒரு மொபைல் ஐடிக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், வீடியோக்கள் SD (480p) தரத்தில் பயன்படுத்த முடியும் என நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் இந்த சந்தாவை இந்திய மொபைல் பயனாளர்கள் தொடங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஏனெனில், 2019ம் ஆண்டின் 6 மாதம் முடிவில் 5 மில்லியன் பயனாளர்கள் நெட்ஃப்ளிக்ஸை சப்ஸ்க்ரைப் செய்துள்ளதால் மேலும் பல ரசிகர்களைக் கவர்வதற்காக இந்த புதிய சந்தா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!