Viral
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி வெற்றிகரமாக முறியடிப்பு: வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோ பேட்டி!
வெனிசூலாவின் அதிபராக நிகோலஸ் மதுரோ கடந்த ஆண்டு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இதை ஏற்காத எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ, தன்னை இடைக்கால அதிபராக பிரகடனம் செய்தார். ஜூவான் குவைடோக்கு அமெரிக்கா ஆதரவாக செயல்படுகிறது. மதுரோவை வெளியேற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
பின்னர் மதுரோவுக்கு எதிரான போராட்டத்தில் ரானுவத்தின் ஒரு ஒரு மகுதி இணைந்திருப்பதாகவும் தெரிவித்தார், குவைடோவின் ஆதரவாளர்களுக்கும் ராணுவத்தினருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டது. குவைடோவின் ஆதரவாளர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டுபட்டனர். இதனால் நாட்டின் பல பகுதியில் கலவரம் மூண்டுள்ளது. இதனிடையே கலவரக்காரர்களை போலீசார் மற்றும் கலவர தடுப்பு காவல் பிரிவினர் விரட்டியடித்துனர். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடித்துவிட்டதாக அதிபர் மதுரோ தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக தொலைக்காட்சி மற்றும் வானொலியில் உரையாற்றிய அவர், ராணுவத்தில் ஒரு சிறு குழுவினர் அரசைக் கவிழ்க்கும் முயற்சியாக வன்முறையில் ஈடுபட்டதாகவும், அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அரசியலமைப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதிக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் தீவிர குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். வன்முறையின் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுவிட்டது. என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, குவைடோவின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
Also Read
-
திருவள்ளுவர் விருது முதல் இலக்கிய மாமணி விருது வரை!: 13 விருதாளர்களை சிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் சிலையுடன் கூடிய அரங்கம் நாளை (ஜன.17) திறப்பு!: முழு விவரம் உள்ளே!
-
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசு... அதிர்ச்சியில் நோபல் கமிட்டி!
-
“இதில் எனக்கு கூடுதல் பெருமை!” : சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்து துணை முதலமைச்சர் உரை!
-
“வாடிவாசலில் சீறி வரும் காளைகள்; வீரத்தை வெளிப்படுத்தும் மாடுபிடி வீரர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி!