Viral
இலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு!
இலங்கையில் நேற்று ஈஸ்டர் பண்டிகை நாளில் தேவாலயம், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் இது வரை 293 பேர் பலியாகியுள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்நிலையில் இன்று கொழும்பு பகுதியில் மேலும் ஒரு குண்டு வெடித்துள்ளது. கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள தேவாலயம் அருகே காரில் இருந்த வெடி குண்டை, போலீஸார் கண்டுபிடித்து செயலிழக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென குண்டு வெடித்தது. இதில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இலங்கையில் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 0பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!