Viral
பேட்டா நிறுவனத்திற்கு ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம் !
சண்டிகரைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் ஒருவர் பேட்டா ஷூ கடையில் ஷு வாங்கிய பின்னர் கேரி பேக்-காக 3 ரூபாய் அதிகம் தர வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். 402 ரூபாய் பில் பணத்துடன் கூடுதலாக கேரி பேக்-காக 3 ரூபாய் வசூலிக்கப்பட்ட விவகாரத்தை நுகர்வோர் நீதிமன்றத்தில் அந்த வாடிக்கையாளர் முறையிட்டார்.
இந்த வழக்கின் மீதான தீர்ப்பில், “உங்கள் கடையில் பொருள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு நீங்கள்தான் கேரி பேக் தர வேண்டும். சுற்றுச்சூழல் நலன் கருதினால் உங்கள் நிறுவனம் அதற்குத் தகுந்த மாற்று ஏற்பாடுகளை வாடிக்கையாளர்களுக்குச் செய்து கொடுக்க வேண்டும்” என பேட்டா நிறுவனத்திடம் உத்தரவு பிறப்பித்தது.
கூடுதலாக, வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட செலவுகளைத் திருப்பி அளிக்குமாறும் பேட்டா ஷூ நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதனால், கேரி பேக் செலவு 3 ரூபாய், வழக்குத் தொடுத்த செலவு 1,000 ரூபாய், நஷ்ட ஈடாக 3 ஆயிரம் ரூபாய், அபராதமாக 5 ஆயிரம் ரூபாய் என 9 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிடப்பட்டது.
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!