Tamilnadu
50-ஆவது பிறந்தநாள் : பேரறிஞர் அண்ணா - கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்!
தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 50-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, பெரியார் திடலுக்குச் சென்ற உதயநிதி தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
பிறகு அங்கு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தி.மு.க. மூத்த தலைவர்களுக்குப் பொற்கிழிகள் வழங்கினார். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதையடுத்து, முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று, அங்கு கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் சி.ஐ.டி. குடியிருப்பு இல்லம் சென்று அங்கு கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி-யிடம் வாழ்த்து பெற்றார்.
இதற்கடுத்து, சென்னை குறிஞ்சி இல்லத்தில் உடன்பிறப்புகளின் வாழ்த்துகளைப் பெற்றார்.
Also Read
-
தொகுதி மறுவரையறையில் இதுதான் திமுக நிலைப்பாடு .. சமரசத்திற்கு இடமில்லை : மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா : நவ. 30-ல் கூடுகிறது நாடாளுமன்றம் - மகளிர் இடஒதுக்கீட்டில் அதிரடி!
-
ஊழல் சாம்ராஜ்ய முதலமைச்சர் விஜய்.. கிரிமினல் மாபியாதான் த.வெ.க. ஆட்சி : திமுக தலைமைக் கழகம் காட்டம்!
-
5 தொகுதியில் 2 தொகுதியில் மட்டுமே தேர்தல் நடத்த அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு என்ன?
-
“இலட்சியப் பாதையில் முன்னேறு” : இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!